For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 சிக்சர் சாதனை படைத்தது எப்படி? உண்மையை சொன்ன ருத்துராஜ் கெய்க்வாட்.. அவர் பெயர் தான் மனதில் வந்தது

மும்பை : விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார்.இதன் மூலம் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் ஒரே ஓவரில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி புகழ்பெற்ற ருத்துராஜ் கெய்க்வாட், இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதன் பிறகு விஜய் ஹசாரே தொடரில் சதம் சதமாக குவித்து வந்த ருத்துராஜ் கெய்க்வாட், உத்திரப்பிரதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

சர்வதேச போட்டியில் சொதப்பிய ருத்துராஜ்.. மீண்டும் சதம் விளாசி அசத்தல்.. 5 இமாலய சிக்சர்கள்சர்வதேச போட்டியில் சொதப்பிய ருத்துராஜ்.. மீண்டும் சதம் விளாசி அசத்தல்.. 5 இமாலய சிக்சர்கள்

ஒரு பெயர் தான் வந்தது

ஒரு பெயர் தான் வந்தது

இது குறித்து பேசிய ருத்துராஜ் கெய்க்வாட், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஐந்தாவது சிக்ஸர் அடித்த பிறகு என் மனதில் தோன்றியது ஒரே ஒருவர்தான். அது யுவராஜ் சிங் தான். அவர் 2007 டி20 உலக கோப்பையில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸரை அடித்ததை நான் சிறு குழந்தையாக இருக்கும் போது பார்த்திருக்கிறேன். என்னுடைய பெயரும் அவருடைய பெயருடன் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.

7வது சிக்சர் எப்படி?

7வது சிக்சர் எப்படி?

அதனால் எப்படியாவது நான் ஆறாவது சிக்ஸர் அடிக்க வேண்டும் என நினைத்தேன். என் கனவில் கூட நான் நினைத்தது கிடையாது, ஒரே ஓவரில் ஆறு சிக்ஸரை நான் அடிப்பேன் என்று..! தற்போது யுவராஜ் சிங் உடன் எனது பெயரும் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. நான் ஆறு சிக்ஸர்களை அடித்த பிறகு நாம் ஏன் ஏழாவது சிக்சரையும் அடிக்க கூடாது என்று எனக்குத் தோன்றியது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஓவரில் ஆறு சிக்சர் அடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.

 அணிக்காக விளையாடினேன்

அணிக்காக விளையாடினேன்

அந்த ஓவரின் அதிக ரன்கள் அடித்து அணிக்கு இலக்கை பெரியதாக்க வேண்டும் என நான் நினைத்தேன். அதனால் தான் எவ்வளவு ரன் நடிக்க முடியுமோ அவ்வளவு ரன்களை நான் அடிக்க முயற்சி செய்தேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. நல்ல வேலையாக அது நடந்தது. இந்த வெற்றிக்கும் என்னுடைய சாதனைக்கும் காரணம் என்னுடைய குடும்பமும், அணி வீரர்களும் தான். இதை மகாராஷ்டிரா மக்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன்.

 கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் எனக்கு கடும் நெருக்கடி இருக்கிறது. நாங்கள் இன்றைய ஆட்டத்தில் கூட இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம். எனவே அனைத்து பொறுப்பையும் என் மீது சுமந்து கொண்டு இறுதிவரை விளையாட வேண்டும் என நினைத்தேன். இதை நான் முதல் முறை செய்யவில்லை பலமுறை செய்திருக்கிறேன். இன்னமும் செய்யவும் ஆசைப்படுகிறேன். களத்தில் எனக்கு சக வீரர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். அணியில் மூத்த வீரராக முக்கிய போட்டியில் ரன்கள் சேர்க்க வேண்டிய பொறுப்பில் நான் இருக்கிறேன் என்று ருத்துராஜ் கூறினார்.

Story first published: Tuesday, November 29, 2022, 23:24 [IST]
Other articles published on Nov 29, 2022
English summary
Ruturaj gaikwad reveals the secret about hitting the 7 sixers in a over 7 சிக்சர் சாதனை படைத்தது எப்படி? உண்மையை சொன்ன ருத்துராஜ் கெய்க்வாட்.. அவர் பெயர் தான் மனதில் வந்தது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X