For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குழந்தைகளோடு விளையாடி... 43வது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடும் ‘கிரிக்கெட் கடவுள்’!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் எனப் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். 1973-ம் ஆண்டு பிறந்த சச்சின், 1989-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார்.

தொடர்ந்து தனது அதிரடி ஆட்டங்களால் இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த சச்சினுக்கு, இன்று 43-வது பிறந்தநாள்.

ஓய்வு...

ஓய்வு...

கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், தனது கடைசிப் போட்டியின் போது 74 ரன்கள் அடித்தார். 200க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை 15,911 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18426 ரன்கள் குவித்துள்ளார்.

சமூக அக்கறை...

சமூக அக்கறை...

கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த பின்னரும், அவர் சில போட்டிகளில் பங்கேற்றார். கிரிக்கெட் மட்டுமின்றி சமூக அக்கறையுடன் பல்வேரு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

சுயசரிதை...

சுயசரிதை...

‘பிளேயிங் இட் மை வே' என்ற பெயரில் சச்சினின் சுயசரிதை வெளியாகி ஹிட் அடித்தது. கடந்த 2014ம் ஆண்டு சச்சினுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பாரதரத்னா விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டம்...

பிறந்தநாள் கொண்டாட்டம்...

இந்நிலையில், இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சச்சின். இதனை மும்பையிலுள்ள எம்.ஐ.ஜி கிளப்புடன் சேர்ந்து வித்தியாசமாக அவர் கொண்டாடுகிறார். அதாவது மேக் எ விஷ் இந்தியா அமைப்பு குழந்தைகளுடன், கிரிக்கெட் விளையாடுகிறார் சச்சின்.

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

சச்சினின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மற்ற கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, April 24, 2016, 11:58 [IST]
Other articles published on Apr 24, 2016
English summary
Sachin Tendulkar celebrated his 43rd birthday in a special way by playing street cricket with children at the MIG Club in Mumbai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X