For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங் டெஸ்ட் தரவரிசை.. டெண்டுல்கர், புஜாரா முன்னேற்றம்

By Mathi

துபை: டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் டெண்டுல்கர், புஜாரா சற்று முன்னேறியுள்ளனர்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையே மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் நிறைவடைந்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

நேற்று முன்தினம் கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்த சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை டெஸ்டில் 74 ரன்கள் விளாசியதன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

6வது இடத்தில் புஜாரா

6வது இடத்தில் புஜாரா

இதே டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர் புஜாரா 2 இடங்கள் ஏற்றம் கண்டு 801 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறார். தரவரிசையில் அவரது சிறந்த நிலை இதுவாகும்.

கோஹ்லி 21-வது இடம்

கோஹ்லி 21-வது இடம்

இந்திய வீரர்கள் விராட் கோஹ்லி 21-வது இடத்திலும், முரளிவிஜய் 42-வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 58-வது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங்கில் முதல் 3 இடங்கள்..

பேட்டிங்கில் முதல் 3 இடங்கள்..

முதல் 3 இடங்களில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், அம்லா, மேற்கிந்திய தீவுகளின் சந்தர்பால் தொடருகிறார்கள்.

பந்துவீச்சில் அஸ்வின் முன்னேற்றம்

பந்துவீச்சில் அஸ்வின் முன்னேற்றம்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தமிழகத்தின் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சிறந்த நிலையாக 808 புள்ளிகளுடன் 5-வது இடத்தை எட்டியிருக்கிறார்.

டாப் 10-ல் ஓஜா

டாப் 10-ல் ஓஜா

மும்பை டெஸ்டில் 10 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் 4 இடங்கள் உயர்ந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா மீண்டும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் 9-வது இடம் வகிக்கிறார்.

பந்துவீச்சில் முதல் 3 இடங்கள்

பந்துவீச்சில் முதல் 3 இடங்கள்

முதல் 3 இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், பிலாண்டர், இலங்கையின் ஹெராத் ஆகியோர் உள்ளனர்.

ஆல் ரவுண்டரில் அஸ்வின் முதலிடம்

ஆல் ரவுண்டரில் அஸ்வின் முதலிடம்

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

2வது இடத்தில் இந்திய அணி

2வது இடத்தில் இந்திய அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் இந்தியா, அணியின் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றுள்ளது. இந்த தொடருக்கு முன்பாக இந்தியா 116 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதர நாடுகளின் இடம்..

இதர நாடுகளின் இடம்..

தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 5-வதுஇடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 6-வது இடத்திலும், இலங்கை 7-வது இடத்திலும் இருக்கிறது.

Story first published: Monday, November 18, 2013, 11:54 [IST]
Other articles published on Nov 18, 2013
English summary
Master Blaster Sachin Tendulkar has ended his record-breaking 200-Test career by finishing at 18th spot in the latest ICC Test batting rankings, which were released on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X