For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீர்னு இப்படி சொன்னா என்ன பண்றது? இக்கட்டான நிலையில் கிரிக்கெட்.. சச்சின் சொன்ன ஐடியா!

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நீண்ட இடைவெளிக்கு பின் துவங்க உள்ளன.

Recommended Video

Sachin Tendulkar questions saliva ban, gave an idea for ball swing

கிரிக்கெட் வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை ஐசிசி புகுத்தி உள்ளது.

அதில் எச்சில் பயன்படுத்தக் கூடாது என்பதும் ஒன்று. வேகப் பந்துவீச்சாளர்கள் எச்சில் பயன்படுத்தாமல் பந்தை ஸ்விங் செய்ய முடியாது என்பதால் கிரிக்கெட்டில் பந்துவீச்சு அதன் முக்கியத்துவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோஸ்ட் படம் ஏதாவது எடுத்தா ஜுவாலாவை யூஸ் பண்ணிக்கலாம் போல! கோஸ்ட் படம் ஏதாவது எடுத்தா ஜுவாலாவை யூஸ் பண்ணிக்கலாம் போல!

ஸ்விங் ஆகும் பந்து

ஸ்விங் ஆகும் பந்து

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை வேகப் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் 10, 15 ஓவர்கள் வரை மட்டுமே பந்தை ஸ்விங் செய்ய முடியும். அந்த சமயத்தில் விக்கெட் எடுப்பது எளிது. அதன் பின் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்வது கடினம்.

எப்படி ஸ்விங் செய்வது?

எப்படி ஸ்விங் செய்வது?

பழைய பந்தை பந்தை ஸ்விங் செய்ய வைக்க வேண்டும் என்றால் அதன் பளபளப்புத் தன்மையை இழக்கச் செய்ய வேண்டும். எடையை ஒரு பக்கம் மட்டும் குறைக்கச் செய்ய வேண்டும். அதற்காக கிரிக்கெட் வீரர்கள் ஒரு பக்கம் மட்டும் பந்தை எச்சில் வைத்து தேய்ப்பார்கள்.

எச்சில் பயன்படுத்துவதை நிறுத்த முடியாது

எச்சில் பயன்படுத்துவதை நிறுத்த முடியாது

இந்த உத்தியை கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் பயிற்சி செய்யத் துவங்கும் போதே அவர்களுக்கு கற்றுத் தரப்படும். அது அவர்கள் அடி மனதில் பதிந்து போய் இருக்கும். இந்த நிலையில் தான் கிரிக்கெட் வீரர்கள் பந்தின் மீது எச்சில் பயன்படுத்த தடை என்ற விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் கடினமானது

மிகவும் கடினமானது

இது பற்றி சச்சின் டெண்டுல்கர், பிரெட் லீ உரையாடினர். அப்போது பிரெட் லீ பந்துவீச்சாளர்கள் 8, 9 வயதில் இருந்து எச்சில் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறார்கள். திடீரென அதை செய்யக் கூடாது என்றால் அது மிகவும் கடினமானது என்றார்.

வியர்வை

வியர்வை

சிலர் வியர்வையை பயன்படுத்தி பந்தை தேய்க்கலாம் என கூறி வரும் நிலையில், வியர்வையே வரவில்லை என்றால் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இது பந்துவீச்சாளர்களுக்கு பாதகமான விதி எனவும் அவர் கூறினார்.

மெழுகு

மெழுகு

பின் சச்சின் இது பற்றி கூறுகையில், எச்சிலுக்கு பதில் ஒரு அணி ஒரு இன்னிங்க்ஸில் குறிப்பிட்ட அளவு மெழுகு பயன்படுத்த ஐசிசி அனுமதி அளிக்க வேண்டும் என கூறினார். மெழுகை வைத்து பந்தை தேய்த்து எடையை குறைக்க முடியும் என மேலும் சில முன்னாள் வீரர்களும் கூறி உள்ளனர்.

அமலுக்கு வரலாம்

அமலுக்கு வரலாம்

சச்சின் டெண்டுல்கர் யோசனையை ஐசிசி அமல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன டெஸ்ட் தொடரில் ஏற்படும் சிக்கல்களை அடுத்து ஐசிசி தன் விதிமுறைகளை மாற்றக் கூடும். அப்போது இந்த யோசனை கருத்தில் கொள்ளப்படலாம்.

Story first published: Wednesday, June 10, 2020, 20:48 [IST]
Other articles published on Jun 10, 2020
English summary
Sachin Tendulkar gave an idea to make the ball swing as ICC asks bowlers not to use saliva.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X