For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த இழப்புகள்... போட்டிகளில் பங்கேற்பு... மனதீப், ராணாவிற்கு சச்சின் பாராட்டு

துபாய் : தங்களின் சொந்தங்களை இழந்த போதிலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளனர் மன்தீப் சிங் மற்றும் நிதீஷ் ராணா.

இதையடுத்து அவர்களின் இந்த செய்கைக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கேகேஆர் அணி வீரர் ராணாவின் மாமனார் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய பஞ்சாப் அணி வீரர் மன்தீப்பின் தந்தை கடந்த வெள்ளியன்று உயிரிழந்துள்ளார்.

சொந்தங்களை இழந்த வீரர்கள்

சொந்தங்களை இழந்த வீரர்கள்

ஐபிஎல் தொடர் 40 போட்டிகளை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையில், காயங்களும் இழப்புகளும் கூட நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாப் வீரர் மன்தீப் சிங்கின் தந்தை உயிரிழந்த நிலையில், நேற்றைய தினம் கேகேஆர் அணி வீரர் நிதீஷ் ராணாவின் மாமனார் உயிரிழந்துள்ளார்.

சச்சின் பாராட்டு

சச்சின் பாராட்டு

ஆயினும் இந்த வீரர்கள் தங்களது போட்டிகளை ஆடி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர்களின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தகைய இழப்புகள் வலியை தந்துள்ள நிலையில், இறுதியாக அவர்களை சந்திக்க செல்லாதது மேலும் வலியை தரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் குறித்து பாராட்டு

ஆட்டம் குறித்து பாராட்டு

இந்த இழப்பிலிருந்து சந்தீப் மற்றும் மன்தீப் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீண்டுவர பிரார்த்தனை செய்வதாகவும் சச்சின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களது நேற்றைய ஆட்டம் குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தையை இழந்த சச்சின்

தந்தையை இழந்த சச்சின்

கடந்த 1999 உலக கோப்பை போட்டியின்போது டெண்டுல்கரின் தந்தை உயிரிழந்தார். இதையடுத்து இந்தியா திரும்பிய சச்சின் டெண்டுல்கர், சடங்குகளை முடித்துக்கொண்டு உடனடியாக பிரிட்டன் சென்று மீண்டும் போட்டிகளில் பங்கேற்றார். மேலும் கென்யாவிற்கு எதிரான போட்டியில் சதமடித்து அவர் தனது அஞ்சலியை செலுத்தினார்.

Story first published: Sunday, October 25, 2020, 13:08 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
During the 1999 World Cup, Tendulkar lost his father
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X