என்னா அடி.. ரெஸ்ட் எடுத்த தவானை அடித்து, உதைத்து கிரிக்கெட் ஆட அனுப்பி வைத்த மகன்!

தவானை அடித்து, உதைத்து கிரிக்கெட் ஆட அனுப்பி வைத்த மகன்!

டெல்லி : இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கவில்லை.

காயம் குணமடைந்த நிலையில், அடுத்து நடக்க உள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

இதற்கிடையே வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த அவரை, அவரது மகன் "ஏன் விளையாட செல்லவில்லை? விளையாடப் போ" என்று கூறி கடுமையாக அடித்து, உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தவான் காயம்

தவான் காயம்

ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடருக்கு முன் பேட்டிங்கில் தடுமாறி வந்தார். எனினும், தொடர்ந்து போட்டிகளில் இடம் பெற்று வந்த அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் பங்கேற்ற உள்ளூர் போட்டியில் முட்டியில் கடுமையாக காயம் அடைந்தார்.

சிகிச்சை மற்றும் ஓய்வு

சிகிச்சை மற்றும் ஓய்வு

இதையடுத்து, தவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது காயத்துக்கு தையல் போடப்பட்டதால் அவரால் உடனடியாக கிரிக்கெட் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. சில வாரங்கள் ஓய்வில் இருந்தார் தவான்.

ராகுல் அசத்தல் ஆட்டம்

ராகுல் அசத்தல் ஆட்டம்

அவருக்கு பதில் அணியில் துவக்க வீரராக இடம் பெற்ற ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் சிறப்பாக ரன் குவித்தார்.

தவானுக்கு மீண்டும் வாய்ப்பு

தவானுக்கு மீண்டும் வாய்ப்பு

ராகுலை தாண்டி தவானுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், தவான் அடுத்து நடக்க இருக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

டி20 தொடரில் உறுதி

டி20 தொடரில் உறுதி

இதில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளதால் தவான் நிச்சயம் களமிறங்கும் வாய்ப்பை பெறுவார். ராகுல், தவான் இருவரும் துவக்கம் அளிப்பார்கள்.

ஒருநாள் போட்டியில் தவான்

ஒருநாள் போட்டியில் தவான்

அதே சமயம், ஒருநாள் தொடருக்கான அணியில் தவான், ராகுல், ரோஹித் சர்மா ஆகிய மூவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் மூவரில் எந்த இருவர் அணிக்கு துவக்கம் அளிப்பார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது. தவானுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

உதை கொடுத்த மகன்

உதை கொடுத்த மகன்

இப்படி சிக்கலில் இருக்கும் தவான் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரது மகன் "ஏன் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடவில்லை?" எனக் கேட்டு அவரை முகத்தில், குத்தி, தலையில் உதைத்து அட்டகாசம் செய்தார்.

பரவும் வீடியோ

பரவும் வீடியோ

அந்த வீடியோவில் தவான் மகன், முதலில் அவரிடம் "ஏன் ஆடவில்லை?" எனக் கேட்கிறார். பின் அவர் மேல் ஏறி, கழுத்தில் ஒரு கால் வைத்து, மற்றொரு காலால் உச்சந்தலையில் கடுமையாக உதைக்கிறார். அந்த வீடியோவை தவான் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

குத்துச்சண்டை வீராங்கனை

தவானின் மனைவி ஆஸ்திரேலியாவில் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். அவரைப் போலவே அவரது மகன் குத்து விட்டு, கிக் பாக்ஸிங் போல உதைத்தார். இதைக் கண்ட தவான் மனைவி கண்டிப்பாக இது எனது மகன் தான் எனக் கூறியது வேடிக்கையாக இருந்தது.

தவான் சதம்

தவான் சதம்

இந்த சம்பவத்துக்குப் பின் தவான் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆந்திரா அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். தவான் இந்தப் போட்டியில் 137 ரன்கள் குவித்து தன் பார்மை நிரூபித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Shikar Dhawan son bashed him for not playing cricket
Story first published: Thursday, December 26, 2019, 11:16 [IST]
Other articles published on Dec 26, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X