For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

300 போச்சே.. "டிராவிட் பேச்சை கேட்டிருக்கக் கூடாது" - முரளிதரனிடம் புலம்பிய ஷேவாக் - 11 வருட கதை

மும்பை: 90'ஸ் கிட்ஸ் என்றுமே மறக்க முடியாத மேட்ச் ஒன்று இருக்கு. ஷேவாக் ஒரே நாளில் இலங்கையை வெளுத்துவிட்ட மேட்ச் அது. ஆனால், அதே டெஸ்ட் போட்டியின் ஒரே மைனஸ் சேவாக் 300 ரன்களை தவறவிட்டது.

2009ம் ஆண்டு மும்பையில், இந்தியா - இலங்கை அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதின. இதில், முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 ரன்கள் எடுத்திருந்தது

இதன் பிறகு இந்திய அணியில் முரளி விஜய், ஷேவாக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முரளி விஜய் நிதானமாய் இன்னிங்ஸை தொடங்க வெடிக்க ஆரம்பித்துவிட்டார் ஷேவாக்.

பதவி விலகும் சாஸ்திரி; திடீரென குட்டையை குழப்பும் டிராவிட் - இந்திய அணியின் புதிய கோச் யார்?பதவி விலகும் சாஸ்திரி; திடீரென குட்டையை குழப்பும் டிராவிட் - இந்திய அணியின் புதிய கோச் யார்?

 283 ரன்கள்

283 ரன்கள்

254 பந்துகளில் 293 ரன்கள் விளாசினார். இரண்டாவது நாளில், இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. ஒரே நாளில், இலங்கை பவுலர்களை ஓட விட்ட ஷேவாக், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 283 ரன்கள் குவித்திருந்தார். அவர் அதே நாளில் 300 ரன்களை அடித்துவிடுவதில் குறியாக இருந்தார். ஆனால், அப்போது ஷேவாக்குடன் விளையாடிக் கொண்டிருந்த டிராவிட், ஷேவாக்கிடம் "3ம் நாள் காலை முச்சதம் அடித்துக் கொள்ளலாம்" என்று கூறியிருக்கிறார். இதனால், தனது வேகத்தை குறைத்த ஷேவாக், மறுநாள்.. அதாவது 3வது நாள் காலை மேற்கொண்டு 10 ரன்கள் மட்டும் எடுத்திருந்த நிலையில், முரளிதரன் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 முச்சதம் மிஸ்ஸிங்

முச்சதம் மிஸ்ஸிங்

11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து இப்போது தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் முத்தையா முரளிதரன். இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பையில் எங்களுக்கு எதிராக ஷேவாக் 290 ரன்கள் அடித்ததை நான் நினைவில் வைத்துள்ளேன். அடுத்த நாளில் அவரை 300 ரன்கள் ரன்கள் அடித்துக் கொள்ளலாம் என்றும் பொறுமையாக விளையாடும் படியும் ஷேவாக்கிடம் டிராவிட் என்று நினைக்கிறேன். ஆனால், மறுநாள் காலையில், ஷேவாக் முச்சதம் அடிக்க தவறினார். எனது பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதுகுறித்து ஷேவாக் என்னிடம், 'நான் ராகுலின் பேச்சைக் கேட்காமல் இருந்திருக்க வேண்டும்' என வருத்தப்பட்டார்.

ஆபத்தானவர்

ஆபத்தானவர்

எனது பந்துவீச்சை ஷேவாக் நன்றாக ரீட் செய்வார். ஆனால், அவரோ என்னை கணிக்க முடியவில்லை என்பார். ஆனால், உண்மை அதுவல்ல. அவர் என்னை ரீட் செய்கிறார். ஏனெனில், அவர் என்னை வித்தியாசமான முறையில் விளையாடினார் (மற்றவர்களை விட). அவர் மிகவும் ஆபத்தானவர். இதை நான் பலமுறை கூறியுள்ளேன்" என்று அவர் மேலும் கூறினார்.

 சேவாக் ஃபார்முலா

சேவாக் ஃபார்முலா

ஷேவாக்கிற்கு, நான் நிறைய ஃபீல்டர்களை நிறுத்தி வைத்திருப்பேன். ஏனென்றால் அவர் எப்போதாவது ஒரு தவறு செய்வார் என்று எனக்கு தெரியும். அன்றைய தினம் அவருக்கானதாக அமைந்துவிட்டதால், உலகின் எப்பேற்பட்ட பவுலராக இருந்தாலும் அவர் அட்டாக் செய்துவிடுவார். எனவே, நாங்கள் ஒரு கடினமான ஃபீல்டிங்கை அமைத்து, அவர் தவறு செய்யும் வரை காத்திருந்து, அவருடைய விக்கெட்டை வீழ்த்த முயற்சிப்போம். சேவாகின் அணுகுமுறை என்பது, 'நான் எனக்கு 2 மணி நேரம் செலவிட்டு 150 ரன்கள் அடிப்பேன். நான் நாள் முழுவதும் பேட் செய்தால், நான் 300 ரன்கள் எடுப்பேன்' என்பதே. 98-99 ரன்களில் பேட்டிங் செய்யும் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள், சிங்கிள்ஸ் எடுத்து சதம் அடிக்க நினைப்பார்கள். ஆனால் ஷேவாக் ஒரு சிக்சருக்குச் செல்வார். ஷேவாக் தனக்கு சதம் கிடைத்ததா இல்லையா என்றெல்லாம் கவலைப்பட மாட்டார். அவர் தனது ஷாட்ஸ்களை அடித்துக் கொண்டே இருப்பார். முதல் 10 ஓவர்கள் மட்டும் தான் பவுலர்களின் பேச்சை ஷேவாக் கேட்பார். அதன் பிறகு, ஷேவாக் பேச்சை தான் பவுலர்கள் கேட்க வேண்டும். இதுதான் அவரது ஒரே ஃபார்முலா. அவர் விளையாடிய காலம் வரை ஷேவாக் இதைத் தான் ஃபாலோ செய்தார்" என்று முரளிதரன் கூறினார். ஷேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் 49.34 ஆவரேஜுடன் 8586 ரன்களும், 251 ஒருநாள் போட்டிகளில் 8273 ரன்களும், 19 டி 20 போட்டிகளில் 394 ரன்களும் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 20, 2021, 19:02 [IST]
Other articles published on Aug 20, 2021
English summary
Should've never listened to Dravid Sehwag's 293 - சேவாக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X