பாபர் அசாம் ஓரமா போங்க.. உலக சாதனையை தனதாக்கிய சுப்மன் கில்.. வெறும் 21 இன்னிங்ஸ்களில் ரெக்கார்ட்!

இந்தூர்: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் சுப்மன் கில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

இரு அணிகளும் மோதிய 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கார் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிதறடித்தனர். குறிப்பாக ஓப்பனிங் வீரர்கள் 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கினர். 85 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் 101 ரன்களை விளாசினார். மற்றொரு ஓப்பனரான சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களை அடித்திருந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

உலக சாதனை படைப்பு

உலக சாதனை படைப்பு

இந்த தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த சுப்மன் கில், 2வது போட்டியில் 40 ரன்களை அடித்திருந்தார். தற்போது 112 ரன்களை அடித்துள்ளதன் மூலம் இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் பட்டியலில் பாபர் அசாமை சமன் செய்தார். பாபர் அசாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு 360 ரன்களை அடித்தார். தற்போது கில் நியூசிக்கு எதிராக 360 ரன்களை விளாசியுள்ளார்.

தவான் சாதனை

தவான் சாதனை

இதுமட்டுமல்லாமல் ஷிகர் தவானின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த இந்தியராக ஷிகர் தவான் இருந்தார். அவர் 24 இன்னிங்ஸ்களை இதற்காக எடுத்துக்கொண்டார். ஆனால் சுப்மன் கில் தற்போது 21 இன்னிங்ஸ்களில் 4வது சதத்தை அடித்துவிட்டார்.

இமாலய ஸ்கோர்

இமாலய ஸ்கோர்

இப்படி சாதனையுடன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க, அதன்பின்னர் வந்த விராட் கோலி 36 ரன்கள், துணைக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 54 ரன்களையும் அடித்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 385 ரன்களை குவித்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Young opening player Shubman gill equals Babar Azam's world record in India vs New Zealand 3rd ODI, here is the record details
Story first published: Tuesday, January 24, 2023, 17:56 [IST]
Other articles published on Jan 24, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X