For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார்யா இவரு.. இப்படி விளையாடுறார்.. இந்தியா அணிக்கு கிடைக்க போகும் புதிய பினிஷிங் கிங்!

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

By Shyamsundar

கேப்டவுன்: தற்போது நியூசிலாந்தில் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய ஏ அணிக்கு பொதுவாக இரண்டு பிட்ச்களில் விளையாட வராது.

இந்தியா எப்போதுமே நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா பிட்ச்களில் அதிகமாக சொதப்பும். ஆனால் இந்திய ஜூனியர் அணி அப்படி இல்லை.

ஜூனியர் அணி அங்கு நடக்கும் ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக இந்திய அணியின் சுப்மான் கில் என்ற வீரர் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

மூன்று போட்டிகள்

மூன்று போட்டிகள்

இந்த தொடரில் வரிசையாக மூன்று போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. எந்த அணியும் தங்கள் விளையாடிய மூன்று போட்டியிலும் வெற்றி பெறவில்லை. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

தகுதி

தகுதி

இப்போது இந்திய அணி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. அதன்பின் பப்புவா நியூ கினியா அணியை தோற்கடித்தது. இந்த நிலையில் கடைசியாக நடந்த போட்டியில் ஜிம்பாபே அணியை எளிதாக தோற்கடித்தது.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

இந்த போட்டியில் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மான் கில் மிகவும் சிறப்பாக விளையாடினார். வெறும் 59 பந்துகளில் 90 ரன் அடித்தார். கிட்டத்தட்ட டி-20 போட்டி போலவே ஆடினார். 13 பவுண்டரி 1 சிக்ஸர் என ரன் தாண்டவம் ஆடி இருக்கிறார்.

ராகுல்

ராகுல்

இவர் மீது ராகுல் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்து இருந்தார். கடைசி போட்டியில் இவர் ஆட்டத்தை பார்த்துவிட்டு மிரண்டு போய் இருக்கிறார். இவர் விக்கெட்டை வீழ்த்துவதே மற்ற அணிகளுக்கு கஷ்டமாக இருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியா இரண்டு முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

ரன்

ரன்

இவர் கடைசியாக ஆடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளார். 63, 32, 129, 0, 63, 90 என இந்திய ஏ அணி வீரர்களுக்கு இணையாக ஆடி இருக்கிறார். பஞ்சாப்பை சேர்ந்த இவருக்கு தற்போது 18 வயது கூட முழுமையாக நிரம்பவில்லை. இப்போதே இவர் ராகுல் டிராவிட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து இருக்கிறார்.

ஏலம்

ஏலம்

இன்னும் ஐபிஎல் ஏலம் வேறு இருக்கிறது. இவரை எப்படியும் எதாவது ஒரு அணியில் மிகவும் அதிக தொகை கொடுத்து எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் இவரின் மதிப்பு தெரியவரும்.

Story first published: Friday, January 19, 2018, 22:16 [IST]
Other articles published on Jan 19, 2018
English summary
Indian batsman Shubman Gill palyed very well in Under 19 World Cup match. He has scored 90 in just 59 balls with 13 boundaries and 1 six. Rahul believes he will join in Indian team soon.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X