For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்தில் கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனா.. ஐபிஎல் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ்

By Aravinthan R

லண்டண்: இங்கிலாந்தில் நடந்து வரும் கியா பெண்கள் சூப்பர் லீக் தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி கலக்கி வருகிறார்.

இந்த தொடரில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக ஆடி வரும் மந்தனா, இது வரை ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் அடித்து, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலிலும் கூட இவரே முதல் இடத்தில் இருக்கிறார்.

Smiriti Mandhana continuing her outstanding performance in the Kia Super League


இது பற்றி பேசிய மந்தனா, “சென்ற உலகக்கோப்பை முடிந்த பின், என் பேட்டிங் மற்றும் உடற்தகுதிக்காக நிறைய உழைத்தேன். என் பிடிமானத்தில் சிறிய மாற்றம், அதிக தயார் நிலை ஆகிய இரண்டு மாற்றங்களை நான் செய்தேன். இது அடித்து ஆடவும், உள் வட்டத்தை எளிதாக கடக்கவும் உதவுகிறது. இது எனக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது” என்றார்.

கியா சூப்பர் லீக் தொடரில் ஏழு இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள மந்தனா 387 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், இரண்டு அரைசதம், 21 சிக்ஸர்கள், 41 பவுண்டரிகள் அடித்துள்ளார். இவர் ஆடிய ஏழு போட்டிகளில் முறையே 48, 37, 52*, 43*, 102, 56, 49 என ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் இவரது ஆவரேஜ் 77.40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆகும்.

ஐபிஎல் தொடரில் முதல் பத்து இடத்தில் இருக்கும் அதிக ரன் குவித்தவர்களோடு ஒப்பிட்டால், மந்தனாவின் ஆவரேஜ் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அதிகம் என்பது ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது.

இது பற்றி பேசிய மந்தனா, “இந்த தொடரின் பலவிதமான பேட்டிங் புள்ளிவிவரங்களில் நான் முன்னிலையில் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை. எனினும், அணி வெற்றி பெற்றால் நான் தான் அதிக மகிழ்ச்சி அடைவேன். எனது ரன்கள் அணியின் வெற்றியில் பங்கு வகிக்கும் என நம்புகிறேன். அந்த செயலில் சதமோ, அரைசதமோ கிடைத்தால் அது ஒரு வெகுமதி” என கூறினார்.


Story first published: Sunday, August 12, 2018, 13:40 [IST]
Other articles published on Aug 12, 2018
English summary
Smiriti Mandhana continuing her outstanding performance in the Kia Super League T20 for women.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X