For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்” இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??

லாகூர்: இந்திய அணி வீரர் விராட் கோலி குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறியிருந்த பாகிஸ்தான் வீரர் சோஹைல் கான், தற்போது வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கையும் வம்பிற்கு இழுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி தான் படு சுவாரஸ்யமாக இருக்கும் என்று மாறி தற்போது களத்திற்கு வெளியில் கருத்து மோதல்களும் ஏற்படுத்தி வருகிறது. அதுவும் குறிப்பாக சோஹைல் கான் ஒவ்வொரு இந்திய வீரராக டார்கெட் செய்து வருகிறார்.

சமீபத்தில் விராட் கோலி அடிக்கும் ஷாட்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது, அசால்டாக அடிக்கும் சிக்ஸர்களை எதற்காக இப்படி பாராட்டுகிறீர்கள் என்பது போல விமர்சித்திருந்தார்.

கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து

கோலியின் சிக்ஸர்

கோலியின் சிக்ஸர்

கோலி குறித்து பேசிய அவர், டி20 உலகக்கோப்பையில் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்தை விராட் கோலி ஸ்ட்ரைட்டில் சிக்ஸர் அடித்தது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. சரியாக இடைவெளி கொடுத்து பந்தை நேர்திசையில் தூக்கிவிட்டார் அவ்வளவு தான். கடினமான லெந்தில் போடப்பட்ட அந்த பந்தை கவர் திசையில் கூட அடித்திருக்கலாம். எனினும் அதனை ஸ்ட்ரைட்டாக அடித்தார். மற்றபடி அதில் ஒன்றும் இல்லை எனக் கூறியிருந்தார்.

சோஹைல் கான் விமர்சனம்

சோஹைல் கான் விமர்சனம்

உலகமே பாராட்டி தள்ளிய விராட் கோலியின் அந்த ஷாட்டை, சோஹைல் கான் விமர்சித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோலியை தொடர்ந்து உம்ரான் மாலிக்கையும் சீண்டியுள்ளார். அதாவது உம்ரான் மாலிக் தற்போது இந்தியாவின் அதிவேக பவுலராக இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் 156கிமீ வேகத்தில் வீசி தனது புதிய உச்சத்தை தொட்டார். ஆனால் இதெல்லாம் ஒரு வேகமா என சோஹைல் கேட்டுள்ளார்.

என்ன பேசினார்?

என்ன பேசினார்?

இதுகுறித்து பேசிய அவர், உம்ரான் மாலிக்கை ஓரிரு போட்டியில் பார்த்தேன், அவர் நல்ல பவுலர் தான். வேகமாக ஓடுவது, டெலிவரி செய்வது அனைத்துமே நன்றாக உள்ளது. ஆனால் 150 - 155 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்களை கேட்டால் நான் 12 - 15 வீரர்கள் வரை உடனடியாக உலகில் காட்டுவேன். பாகிஸ்தானின் லாகூர் குயாலண்டர்ஸ் அணியில் பார்த்தால் நிறைய வீரர்களை அதுபோல் பார்க்கலாம்.

நிறைய பேர் உள்ளனர்

நிறைய பேர் உள்ளனர்

எங்களின் உள்நாட்டு தொடர்கள் முழுவதும் உம்ரான் மாலிக்கை போன்ற பவுலர்களை தான் வைத்துள்ளோம். உள்நாட்டு தொடர்களில் விளையாடி தேர்ச்சி பெற்று வருவதால் தெரியவில்லை. பாகிஸ்தான் அணியிலேயே எடுத்துக்கொண்டால் நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், சாஹீன் அஃப்ரிடி போன்றோரை உடனடியாக கூறலாம் என கூறியுள்ளார்.

 சோயிப் ரெக்கார்ட்

சோயிப் ரெக்கார்ட்

சோயிப் அக்தர் 161.3கிமீ வேகத்தில் வீசியதே இதுவரை அதிவேக பந்தாக உள்ளது. இதனை உம்ரான் மாலிக் முறியடிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த சோஹைல் கான், சோயிப்பின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் பவுலிங் மிஷினால் மட்டுமே முடியும். ஏனென்றால் எந்தவொரு மனிதனாலும் இனி அதனை செய்ய முடியாது. சோயிப் செய்தார் என்றால் அதற்கு பின் நிறைய கடின உழைப்புகள் உள்ளன என பாராட்டியுள்ளார்.

Story first published: Saturday, February 4, 2023, 13:19 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
Pakistan's ex pacer Sohail Khan Critice umran malik after the controversial remark about virat kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X