For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டால் பாதிக்கும் தென்னாப்பிரிக்கா..பவுமாவால் தொடரும் தோல்வி..எப்போது முடிவு

இந்தூர் : தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டு முறையால், அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

இடஒதுக்கீட்டால் அடித்தட்டு மக்களும் முன்னேற முடியும் என்பதில், எவ்வி த மாற்று கருத்தும் இல்லை. காலம் காலமாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ரிசர்வேஷன் செயல்படுகிறது.

ஆனால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கடைப்பிடிக்கப்படும் ரிசர்வேஷன், சமூக நீதிப்படி வெற்றியாக பார்க்கப்பட்டாலும், போட்டியில் தோல்வியே அந்த அணிக்கு தருகிறது.

“சேட்ட புடிச்ச பையன் சார்”.. தென்னாப்பிரிக்க வீரரை ஓங்கி உதைத்த யுவேந்திர சாஹல்.. திடீர் பதற்றம்! “சேட்ட புடிச்ச பையன் சார்”.. தென்னாப்பிரிக்க வீரரை ஓங்கி உதைத்த யுவேந்திர சாஹல்.. திடீர் பதற்றம்!

தடையை உடைத்த வீரர்கள்

தடையை உடைத்த வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் நிறவெறியால் கருப்பின மக்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடவே கருப்பின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, தடையை உடைத்து கருப்பின வீரர்களும் கிரிக்கெட் விளையாட வந்தனர்.

இடஒதுக்கீடு முறை

இடஒதுக்கீடு முறை

ஆனால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் தொடர்ந்து வெள்ளை நிற வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை உடைக்கும் வகையில் தென்னாப்பிரிக்க அணியில் வெள்ளையர்கள் இல்லாத 4 வீரர்களுக்கு கண்டிப்பாக இடம் வழங்க வேண்டும் என்ற விதி வந்தது. இதனால், தென்னாப்பிரிக்க அணியில் கருப்பின வீரர்களுக்காக சில திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

விளையாட்டு துறையில் திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமே தவிர, அங்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, தென்னாப்பிரிக்க அணி 2015ஆம் ஆண்ட உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்ததற்கு இந்த இட ஒதுக்கீடு தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.

தொடரும் பெவுமா

தொடரும் பெவுமா

விளையாட்டு துறையில் ரிசர்வேஷன் அமல்படுத்தப்படுவதால் பல நன்மைகள் இருந்தாலும், சில பாதகமும் இருப்பதற்குதென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா ஒரு எடுத்துக்காட்டு. இந்த தொடரில் அவர் அடித்த ரன்களே வெறும் 3 ரன்கள் தான். இதில் 2 டக் அவுட். டி20 உலககோப்பை நடைபெற உள்ளதால், பெவுமாவை மாற்றி, வேறு ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாம். ஆனால் இடஒதுக்கீடு விதி இருப்பதால், அந்த அணியால் அப்படி செய்ய முடியாது.

Story first published: Tuesday, October 4, 2022, 20:59 [IST]
Other articles published on Oct 4, 2022
English summary
South Africa is struggling from reservation in cricket as Temba bavuma fails again கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டால் பாதிக்கும் தென்னாப்பிரிக்கா..பவுமாவால் தொடரும் தோல்வி..எப்போது முடிவு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X