
மைதானங்கள்
அகமதாபாத், டெல்லி, நாக்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகளும், சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

டி20 போட்டிகள்
கொல்கத்தா, மொகாலி மற்றும் தர்மசலா ஆகிய நகரங்களில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 போட்டிகளை கடைசியில் வைத்துக்கொள்ளவும், டெஸ்ட் தொடரை முதலில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை
இதேபோல, இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, விசாகப்பட்டிணம், புனே மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில், 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது.

உலக கோப்பை
உலக கோப்பை டி20 போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதற்கான பயிற்சியாக இலங்கைக்கு எதிரான போட்டிகளை இந்தியா பார்க்கிறது.


Click it and Unblock the Notifications











