
அடுத்தடுத்து செஞ்சுரி போட்ட கோஹ்லி
ஆசியக் கோப்பை முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கோஹ்லி அபாரமாக ஆடி சதம் போட்டார். இன்று அவர் இலங்கையுடன் நடந்த போட்டியில் கலந்து கொண்டபோது இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 100வது போட்டியில் ஆடிய பெருமையைப் படைத்தார்.

சச்சின் இடைவெளியே இல்லாமல் 185
சச்சின் டெண்டுல்கர் இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 185 ஒரு நாள் போட்டிகளில் ஆடியவர் ஆவார். இவர்தான் இந்திய வீரர்களில் அதிக அளவில் இடைவெளி இல்லாமல் ஒரு நாள் போட்டிகளில் ஆடியவர்.

அஸாருதீன் 126
முன்னாள் கேப்டன் அஸாருதீன் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 126 போட்டிகளில் ஆடியவர் ஆவார்.

குறுகிய காலத்தில் 100 போட்ட கோஹ்லி
ஆனால் மிகக் குறுகிய காலத்தில் 100 போட்டிகளைக் கொண்டது கோஹ்லிதான்.

2010 முதல்
2010ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 100 போட்டிகளில் ஆடியுள்ளார் கோஹ்லி. இடையில் எந்த ஒரு நாள் தொடரிலும் அவர் பங்கேற்காமல் இருந்ததில்லை.

ஆக மொத்தம் 132
மொத்தத்தில் கோஹ்லி 132 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 5581 ரன்களை எடுத்துள்ளார். இதில் 19 சதம், 30 அரை சதம் அடக்கம்.


Click it and Unblock the Notifications











