For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வர்ற பந்தை சச்சின் நெஞ்சை நிமிர்த்தி சந்தித்தாலே விமர்சனங்கள் போய்டும்- அஸார்

டெல்லி: தான் எதிர்கொள்ளும் பந்துகளை சச்சின் டெண்டுல்கர் தைரியமாக எதிர்கொண்டு ஆடினாலே அவரது ஓய்வு குறித்த பேச்சுக்களும், அவர் ரன் எடுக்கத் திணறுகிறார் என்ற சர்ச்சைகளும் தானாக பறந்தோடி விடும் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் முகம்மது அஸாருதீன்.

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறி வரும் நிலையில் சச்சினுக்கு தைரியமூட்டும் வகையிலான கருத்தை அஸாருதீன் தெரிவித்துள்ளார்.

பந்துகளை தைரியமாக எதிர்கொண்டு அடித்து ஆட சச்சின் முயன்றாலே போதும் என்பதே அவரது அறிவுரையாக உள்ளது. அஸார் சொல்வதைப் பார்ப்போமா...?

திறந்த மனதுடன் பந்துகளை சந்திக்கவும்

திறந்த மனதுடன் பந்துகளை சந்திக்கவும்

திறந்த மனதுடன் பந்துகளைச் சந்திக்க வேண்டும் சச்சின். வருகிற பந்துளை வேகமாக சந்தித்து ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும்.

சமீபத்திய அவுட்டுகளைப் பாருங்கள்

சமீபத்திய அவுட்டுகளைப் பாருங்கள்

சமீபத்திய சச்சின் அவுட்டுகளைப் பார்த்தாலே அவர் பந்துகளை சந்தித்த விதத்தில்தான் பிரச்சினை இருக்கிறது என்பது தெரிய வரும்.

இந்த சின்ன மாற்றமே போதும்

இந்த சின்ன மாற்றமே போதும்

இந்த சின்ன மாற்றத்தை சச்சின் செய்தாலே போதும்.. அவர் எந்த வகையான டெலிவரியையும் எளிதாக எதிர்கொண்டு ரன் எடுக்க முடியும்.

சச்சினால் முடியும்

சச்சினால் முடியும்

இந்த வயதில் எப்படி இப்படி ஆட முடியும் என்று கேட்கலாம். இதற்கு சின்ன டெக்னிக்தான் தேவை. சச்சின் போன்றோருக்கு இது நிச்சயம் கடினமானதல்ல. அவரால் முடியும்.

லேசாக அடித்து ஆடினாலே போதும்.. பிக்கப் ஆகி விடுவார்

லேசாக அடித்து ஆடினாலே போதும்.. பிக்கப் ஆகி விடுவார்

கொஞ்சம் ரன்கள் எடுத்து விட்டால் போதும், பின்னர் சச்சின் பிக்கப் ஆகி விடுவார். அவர் ஸ்டெடியாகி விட்டால் அவரை வீழ்த்துவது கடினம்.

நானும் அப்படித்தான்

நானும் அப்படித்தான்

நானும் கூட இப்படித்தான் ஒரு கட்டத்தில் ரன் எடுக்கத் திணறினேன். அப்போதுதான் ஜாகிர் அப்பாஸ் எனக்கு சில அறிவுரைகளைக் கூறினார். முதலில் கஷ்டமாக இருந்தது. ஆனால் அது சரியான பின்னர் நான் அடித்து ஆட ஆரம்பித்து விட்டேன் என்றார் அஸாருதீன்.

அஸாருதீன் டெக்னிக்கலாக அட்டகாசமான வீரர். பேட்டிங்கிலும் சரி, பீல்டிங்கிலும் சரி பிரமாதமான திறமையை வெளிப்படுத்தியவர் என்பது நினைவிருக்கலாம். இவர் மட்டுமே சச்சினின் குறைகளைக் கண்டுபிடித்து அதை இப்படித் திருத்தலாம் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார் என்பது முக்கியமானது.

Story first published: Saturday, July 20, 2013, 7:12 [IST]
Other articles published on Jul 20, 2013
English summary
Former Indian captain Mohammed Azharuddin reckons that the ageing Sachin Tendulkar could opt for a more open-chested stance to counter quick incoming deliveries which has accounted for his bowled dismissals in recent times.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X