சென்னையில் ஐபிஎல் நடக்கலாமா? வேண்டாமா?.. என்ன சொல்கிறார் சுமந்த் சி ராமன்!

Posted By:
ஐபிஎல் போட்டிகள் பற்றி மனம் திறந்த சுமந்த் சி ராமன்- வீடியோ

சென்னை: சென்னை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் குறித்து சுமந்த் சி ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று நடக்கும் போட்டியில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்த போட்டியை நடத்த கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி தற்போது பிரபல கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்

கிரிக்கெட்

தொடர்ந்து கிரிக்கெட் சம்பந்தமான நிகழ்ச்சிகளை பார்த்து வரும் மக்களுக்கு சுமந்த சி ராமனை தெரியாமல் இருக்காது. இவரது கிரிக்கெட் விமர்சனங்களுக்கு பலர் பெரிய ரசிகர்கள். அதே சமயம் சமீப காலங்களில் இவர் அரசியல் சம்பந்தமான விவாதங்களில் கூட கலந்து கொண்டு பேசி வருகிறார்.

ஆதரவு இல்லை

முதலில் ஐபிஎல் போட்டி குறித்து பேசிய சுமந்த் சி ராமன் ''நான் இந்த முறை எந்த ஐபிஎல் போட்டியையும் பார்க்க செல்ல மாட்டேன். அதே போல் ஐபிஎல் சம்பந்தமான எந்த விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன். காவிரி மேலாண்மை வாரியமோ, அதற்கு இணையான ஒன்றோ அமைக்கப்படும் வரை இதுதான் என் முடிவு. வாழ்க்கையில் விளையாட்டை விட பெரிய விஷயங்கள் சில இருக்கிறது. இதுதான் விவசாயிகளுடன் நிற்பதற்கு சரியான நேரம்'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

வரவேற்பு

வரவேற்பு

இது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொதுவாக சுமந்த் சி ராமன் பாஜக கட்சிக்கு ஆதரவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசக்கூடியவர். ஆனால் இந்த முறை பாஜக கட்சியின் அறிவிப்புக்கு எதிராக அவர் பேசியுள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.

அமைதி

தற்போது ''ஐபிஎல் போட்டி சென்னையில் நடக்க வேண்டுமா, வேண்டாமா என்பது என்பது பற்றி என்னவிதமான பார்வை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். விளையாட்டு போட்டியை பாதியில் தடுப்பது நல்ல விஷயம் கிடையாது. அமைதியாக நடந்து வரும் காவிரி போராட்டத்தில் பிரச்சனை உருவாக்கி விட கூடாது.'' என்றுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Sumanth C Raman opens up about IPl match in Chennai Chepauk.
Story first published: Tuesday, April 10, 2018, 9:46 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற