For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என்னா மனசு சார் உங்களுக்கு”.. சிஎஸ்கே நன்மைக்கு மறைமுக ஐடியா தந்த ரெய்னா.. ஏலத்தில் செய்வார்களா??

சென்னை: சிஎஸ்கே அணி தன்னை புறகணித்த போதும், ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவின் நன்மைக்காக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மறைமுகமாக அறிவுரை கூறியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி கொச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 405 வீரர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ள இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்கலாம் என்பதற்காக அனைத்து அணிகளும் தங்களது கடைசிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஓ நீங்க அப்படி வரீங்களா? மீண்டும் உருவாகும் சிஎஸ்கே விண்டேஜ் படை.. ஐபிஎல் ஏலத்தில் தோனி மெகா ப்ளான்! ஓ நீங்க அப்படி வரீங்களா? மீண்டும் உருவாகும் சிஎஸ்கே விண்டேஜ் படை.. ஐபிஎல் ஏலத்தில் தோனி மெகா ப்ளான்!

சிஎஸ்கே அணி திட்டம்

சிஎஸ்கே அணி திட்டம்

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு மிகவும் ஸ்பெஷலானது என்பதால் தனி கவனம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தோனி விளையாடப்போகும் கடைசி ஐபிஎல்-ஆக இது இருக்கலாம். எனவே கோப்பையுடன் வழியனுப்பி வைக்க கடும் முணைப்பு காட்டி வருகின்றன. எதிர்காலத்தில் மனதை வைத்து இந்த தேர்வுகள் நடைபெறவுள்ளன.

ரெய்னா தந்த ஐடியா

ரெய்னா தந்த ஐடியா

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அதற்காக ஐடியா தந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சாம் கரண் இங்கிலாந்து அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் மிகச்சிறப்பாக இருந்துள்ளார். இதே போல பென் ஸ்டோக்ஸும் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். இவர்களை போன்ற ஆல்ரவுண்டர்கள் அணியில் இருந்தால் எந்த நொடியிலும் ஆட்டத்தை மாற்றிவிடுவார்கள்.

கவனம் பெறும் தமிழக வீரர்

கவனம் பெறும் தமிழக வீரர்

பேட்டிங்கை என எடுத்துக்கொண்டால் நாராயண் ஜகதீசனை பார்க்கலாம். ஏனென்றால் ஜகதீசனுக்கு சிறப்பான கிரிக்கெட் மூளை உள்ளது. எந்த இடத்தில் எப்படி ஆட வேண்டும் என கணக்குப்போட்டு விளையாடக்கூடியவர். சமீபத்தில் தமிழ் நாடு அணிக்காக மிகச்சிறப்பாக ஆடினார். அவர் அணியில் இருந்தால் பலமாக இருக்கும்.

பவுலிங்கிற்கான வீரர்

பவுலிங்கிற்கான வீரர்

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்திய வீரர் ஜெய்தேவ் உனத்கட் பெரிய சொத்து ஆகும். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அனுபவம் கொண்ட உனத்கட் சமீபத்தில் விஜய் ஹசாரே கோப்பையையும் வென்று கொடுத்து அசத்தினார். அவர் தற்போதுள்ள ஃபார்முக்கு நிறைய தாக்கங்களை ஏற்படுத்துவார் என சுரேஷ் ரெய்னா பொதுப்படையாக கருத்துக்கூறியுள்ளார்.

 சிஎஸ்கேவுக்கு அட்வைஸ்

சிஎஸ்கேவுக்கு அட்வைஸ்

ஆனால் ரெய்னா கூறியுள்ள இந்த ஆல்ரவுண்டர்கள், பேட்டிங், பவுலிங் ஆகியவை சிஎஸ்கேவுக்கு தற்போது தேவைப்படும் துறைகள் ஆகும். பிராவோவின் இடத்தை நிரப்ப ஒரு அனுபவ வீரர் தேவை. குறிப்பாக தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் விக்கெட் கீப்பிங் செய்யவும், சூழலை கணித்து ஆட நாராயண் ஜகதீசன் தான் குறிவைக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி தன்னை புறகணித்த போதும், அதன் மீது ரெய்னா அக்கறைக்கொண்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

Story first published: Wednesday, December 21, 2022, 15:30 [IST]
Other articles published on Dec 21, 2022
English summary
EX - IPL Super star Suresh raina gives a indirect tips to CSK ahead of IPL 2023 mini auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X