For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாப் ஆர்டர் ஸ்டிராங்கா இருக்கே..! அப்புறம் எதுக்கு 4ம் நம்பர் வீரர்..! பிசிசிஐயை கழுவிய அந்த நாயகன்

மும்பை: அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் வலுவாக இருக்கும் போது, பிறகு 4ம் வரிசை பேட்ஸ்மேன் எதற்கு என்று முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், பிசிசிஐயை கேலி செய்துள்ளார்.

இந்திய அணி உலக கோப்பையை 2011ம் ஆண்டு கைப்பற்றியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த கோப்பையின் ஆட்ட நாயகன் யுவராஜ் சிங். இந்தியா உலக சாம்பியன் கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தவர்.

அந்த உலக கோப்பையில் முன்வரிசை ஆட்டக்காரர்கள் பலமுறை சறுக்கிய போதும், தூணாக நின்று அணியை கொண்டு சென்றவர். அந்த தொடரில் ஆல் ரவுண்டராக செயல்பட்டு 362 ரன்கள், 15 விக்கெட்டுகளை காலி செய்து. தொடர் நாயகன் விருதோடு, உலக கோப்பையையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தவர் யுவராஜ் சிங்.

ஒண்ணுக்கே வழியில்ல.. 4 பேரா.. என்ன நடக்குமோ? இந்திய அணியின் சரிவை தொடங்கி வைக்கும் அவர்..?ஒண்ணுக்கே வழியில்ல.. 4 பேரா.. என்ன நடக்குமோ? இந்திய அணியின் சரிவை தொடங்கி வைக்கும் அவர்..?

4ம் நம்பர் யார்?

4ம் நம்பர் யார்?

அணியின் மிடில் ஆர்டரில் வலுவாக இருந்து பல கட்டங்களில் வெற்றியை பரிசளித்தவர். இப்போது அணியின் 4ம் நம்பர் பேட்ஸ்மென் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. அந்த இடத்தில் காணப்பட்ட ஓட்டை தான், இந்தியாவின் உலக கோப்பை கனவை காவு வாங்கியது. அந்த உண்மை அரை இறுதியில் நியூசிலாந்துடன் விளையாடிய போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சரவெடி சாம்சன்

தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது. அதில் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். சாம்சனின் பேட்டிங்கை கண்டு வியந்த ஹர்பஜன் சிங், நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்டுள்ள அவரை அணியின் 4ம் வரிசை பேட்ஸ்மேனாக இறக்கலாம் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

யுவராஜ் சிங் கேள்வி

யுவராஜ் சிங் கேள்வி

ஆனால் இதைத்தான், 2011ம் ஆண்டின் 4ம் நம்பர் பேட்ஸ்மென், தொடர் நாயகன் யுவராஜ் சிங் குறை கூறி இருக்கிறார். அணியின் டாப் ஆர்டர் வலுவாக இருக்கும் போது 4ம் நம்பர் பேட்ஸ்மென் எதற்கு என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் ஹர்பஜனுக்கு பதில் அளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது:

4ம் நம்பர் தேவையில்லை

4ம் நம்பர் தேவையில்லை

டாப் ஆர்டர் மிகவும் வலுவாக இருக்கிறதே பிரதர்.. பிறகு எதற்கு 4ம் நம்பர். அவர்களுக்கு (அதாவது இந்திய அணி நிர்வாகத்தை) 4ம் நம்பர் பேட்ஸ்மென் தேவையில்லை என்றார். அதாவது, டாப் ஆர்டர் வலுவாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு நான்காம் வரிசை பேட்ஸ்மேனே தேவையில்லை என்று நக்கலடித்து உள்ளார். அதீத நம்பிக்கையான கருத்தை கொண்ட மனநிலையை, பிசிசிஐ மண்டையில் உரைக்கும்படி யுவராஜ் சிங் கடுமையாக சாடியுள்ளார்.

Story first published: Saturday, September 7, 2019, 14:08 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
Team india don’t need 4th batsman yuvraj singh replies to harbhajan singh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X