For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குத்துச் சண்டைக்கு எப்படி முகம்மது அலியோ.. அதுபோல கிரிக்கெட்டுக்கு சச்சின்- லாரா

கொல்கத்தா: குத்துச் சண்டைப் போட்டிக்கு எப்படி முகம்மது அலி இருக்கிறாரோ, அதேபோல கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் என்று முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

லாராவும், சச்சினும் ஒரு காலத்தில் யார் பெஸ்ட் என்ற விவாதக் களத்தில் வைக்கப்பட்டிருந்த, சமகாலத்து வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்ககது.

கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், லாரா, சச்சினை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். லாராவின் பேச்சிலிருந்து...

புள்ளிவிவரத்தைப் பார்க்காதீங்க

புள்ளிவிவரத்தைப் பார்க்காதீங்க

புள்ளிவிவரத்தை வைத்து சிலரை சச்சினுடன் ஒப்பிடலாம். ஆனால் சச்சின் என்ற தனிப்பட்ட வீரருக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. அவர் தனித்துவம் வாய்ந்தவர்.

முகம்மது அலி போல

முகம்மது அலி போல

எப்படி குத்துச் சண்டையில் எத்தனையோ பிரபலமான வீரர்கள் இருந்தாலும், குத்துச் சண்டையின் அடையாளமாக முகம்மது அலி திகழ்கிறாரோ, கூடைப் பந்துக்கு மைக்கேல் ஜோர்டன் இருக்கிறாரோ, அதேபோல கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர்தான் நினைவுக்கு வருவார்.

சரியான முடிவு

சரியான முடிவு

தனது 200வது டெஸ்ட் போட்டியை முடித்த கையோடு விடைபெறுவது என்று சச்சின் எடுத்த முடிவு மிகச் சரியானதுதான். தனது ஓய்வை முடிவு செய்யும் உரிமை சச்சினுக்கு உண்டு. சரியான நேரத்தில் சரியான முடிவை அவர் எடுத்துள்ளார்.

சச்சின் தாமதத்தில் தவறில்லை

சச்சின் தாமதத்தில் தவறில்லை

தனது ஓய்வை அறிவிக்க சச்சின் கால தாமதம் செய்து விட்டதாக நான் கருதவில்லை. சில ஆண்டுகள் அவர் சரியாக விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் வெளியில் உட்கார்ந்து கொண்டு அவரது ஆட்டத்தை விமர்சிக்க முடியாது, கூடாது. அவர் இந்திய அணியில் எந்த அளவுக்கு இளம் வீரர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதைப் பார்க்க் வேண்டும்.

40 வயதுக்கு மேல் விளையாடியவர்கள் உண்டு

40 வயதுக்கு மேல் விளையாடியவர்கள் உண்டு

சச்சினின் வயதைக் காரணம் கூற முடியாது. காரணம், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் விளையாட்டில் சாதித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் சரியில்லை

வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் சரியில்லை

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடவில்லை. மும்பை போட்டியில் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் லாரா.

Story first published: Monday, November 11, 2013, 8:54 [IST]
Other articles published on Nov 11, 2013
English summary
Heaping lavish praise on Sachin Tendulkar, West Indies cricket great Brian Lara Sunday likened the batting legend to another legend, in boxing, Mohammad Ali. "In terms of statistics, some may come close to him, but in sports there are some individuals who stand apart. When you talk of boxing, you talk of Mohammad Ali; when you mention basketball, you mention Michael Jordan; and when you talk cricket, you talk about Sachin Tendulkar," Lara said during a Cricket Association of Bengal-organised event here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X