For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"தல".. அப்படின்னு கூப்பிட்டாலே.. அது ஒரு உணர்வுங்க.. தோனி செம ஃபீலிங்

சென்னை: கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி சென்னை மண்ணில் வந்து தரையிறங்கியுள்ளார். ரசிகப் புள்ளிங்கோ எல்லாம் செம ஹேப்பியாக உள்ளனர். அவர்கள் மட்டுமா.. தோனியும் கூட மகிழ்ச்சியாக பிராக்டிஸில் ஈடுபட்டுள்ளார்.

Recommended Video

CSK has helped me lot - Dhoni|'தல'னு சொல்லுறது ஒரு உணர்வுங்க.. உணர்ச்சிவசப்பட்ட தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ள தோனி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்து சேர்ந்தார். எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 13வது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் கலக்கப் போகிறார்.

38 வயதாகும் தோனி, இதுவரை 3 முறை சென்னைக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அது போக 2 முறை சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் தோனி தலைமையில் வென்றுள்ளது.

நாங்க இப்ப சிங்கிள் இல்ல... அரையிறுதியில் கர்ஜிக்க தயாராகும் இந்திய பெண் சிங்கங்கள்நாங்க இப்ப சிங்கிள் இல்ல... அரையிறுதியில் கர்ஜிக்க தயாராகும் இந்திய பெண் சிங்கங்கள்

பதிலடியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

பதிலடியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

சமீப காலமாக தோனியின் கிரிக்கெட் திறன் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவர் அவ்வளவுதான், முடிஞ்சு போச்சு என்றெல்லாம் கூட பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அதற்கு இந்த ஐபிஎல் தொடரில் தோனி பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர். அதற்கேற்ப இப்போதே பயிற்சியில் குதித்து விட்டார் தோனி. அதை விட முக்கியமாக சென்னையில் இருப்பதையே அவர் பெரும் பலமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறார்.

தோனி பீலிங்

தோனி பீலிங்

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னை பலவிதங்களிலும் முழுமையாக்கியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒரு நல்ல மனிதனாக, நல்ல கிரிக்கெட் வீரராக, கடினமான சூழலை எப்படி சமாளிப்பது என்பது வரை பல வகையிலும் அது தன்னை முழுமையாக்கியுள்ளதாகவும் பீல்டிலும், பீல்டுக்கு வெளியிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தான் சென்னையிடமிருந்துதான் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அது ஒரு உணர்வு

அது ஒரு உணர்வு

தன்னை இங்கு எல்லோரும் 'தல' என்றுதான் அழைக்கிறார்கள், அது ஒரு உணர்வு. உணர்ந்தால்தான் அதன் அருமை புரியும். 'தல'என்றால் அண்ணன் என்ற அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ரசிகர்களின் அன்பையும், பாசத்தையும் அதில் உணர முடிவதாகவும் சென்னைக்கு வரும்போதெல்லாம் தன்னை 'தல' என்றுதான் கூறி அழைக்கிறார்கள். அவர்கள் கூப்பிடும்போது அதில் பாசம், அன்பு தொனிக்கிறது என்றும் கூறியுள்ளார். அவ்வாறு கூப்பிடுபவர்கள் சிஎஸ்கே விசிறி என்பதையும் என்னால் உணர முடியும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

4432 ரன்கள் குவிப்பு

4432 ரன்கள் குவிப்பு

தோனி இதுவரை 190 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 2 சீசனில் அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடிய போட்டிகளும் அடங்கும். மொத்தமாக 4432 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 23 அரை சதங்களும் அடக்கம். இடையில் நல்ல கேப் விட்டு விட்டார் தோனி. எனவே இந்த தொடர் அவருக்கே அவரை புதிதாக உணர வைக்கும். அதற்கேற்ற வகையில்தான் தற்போது தோனியும் கலக்கத் தயாராகி வருகிறார்.

சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் மோதல்

சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் மோதல்

2020 தொடரில் தனது முதல் போட்டியில் வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்போட்டி மார்ச் 29ம் தேதி வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் செம ஆர்வத்தோடு காத்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியிலும் இதே மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதின என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, March 4, 2020, 16:55 [IST]
Other articles published on Mar 4, 2020
English summary
CSK has helped me improve in everything - Dhoni says
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X