For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே நாளில் இரண்டு சாதனைகள்... வேறு யார்... நம்ம தல தோனிதான்!

டி-20 போட்டிகளில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர், ஒரு போட்டியில் 5 கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி புரிந்துள்ளார்.

Recommended Video

ஒரே நாளில் இரண்டு சாதனைகள் செய்த தல தோனி- வீடியோ

பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்தியா வென்றதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். பிரிஸ்டலில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி இரண்டு உலகச் சாதனைகளைப் புரிந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் வென்று 2-1 என தொடரை இந்தியா வென்றது.

Two records for dhoni

2-வது டி-20 போட்டியின்போது, 500 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை தோனி புரிந்தார். பிரிஸ்டலில் நேற்று நடந்த ஆட்டத்தின்போது, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, இரண்டு உலகச் சாதனைகளைப் புரிந்தார்.

நேற்று நடந்த ஆட்டத்தின்போது, டி-20 போட்டிகளில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி புரிந்தார். நேற்று நடந்த ஆட்டத்தில் 5 கேட்ச்களை தோனி பிடித்தார். இதன் மூலம் 54 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெஸ்ட் இன்டீஸ் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின். அவர் 34 கேட்ச்களை பிடித்துள்ளார்.

நேற்று நடந்த ஆட்டத்தில் 5 கேட்ச்கள் பிடித்ததன் மூலம், ஒரு ஆட்டத்தில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி எட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 4 கேட்ச் பிடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

93 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள பத்மபூஷண் தோனி, 34 ஸ்டம்பிங் செய்து, அதிக ஸ்டம்பிங் செய்தோரில் முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Monday, July 9, 2018, 10:11 [IST]
Other articles published on Jul 9, 2018
English summary
MS dhoni creates two world records during briston t-20 match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X