For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“உங்கள டி20 பேட்ஸ்மேனா புரமோட் பண்றேன்“.. உமேஷ் அடித்த இரண்டே சிக்ஸர்கள்.. வாயடைத்துப்போன எதிரணி!!

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் அடித்த இரண்டே ஷாட்களால் கிரிக்கெட் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்தில் சொதப்பிய போதும் ஃபினிஷிங் சிறப்பாக அமைந்திருந்தது.

யாரு? என்னன்னு தெரிய வேணாமா?.. அஸ்வினை சீண்டிப்பார்த்த வங்கதேச வீரர்.. பதிலடி இருக்கு போலையே! யாரு? என்னன்னு தெரிய வேணாமா?.. அஸ்வினை சீண்டிப்பார்த்த வங்கதேச வீரர்.. பதிலடி இருக்கு போலையே!

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

அதாவது புஜாரா (90), ஸ்ரேயாஸ் ஐயர் (86), அஸ்வின் (58) ஆகியோர் துண் போல நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவர்களையெல்லாம் தாண்டி உமேஷ் யாதவின் மீது தான் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்திய அணி 393 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்த போது 400 ரன்களை எப்படியாவது தாண்டிவிட வேண்டும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

 உமேஷ் யாதவின் அதிரடி

உமேஷ் யாதவின் அதிரடி

அதனை வெறும் இரண்டே பந்துகளில் முடித்துக்கொடுத்தார் உமேஷ் யாதவ். அஸ்வின் அவுட்டான உடனேயே வந்த அவர் முதல் பந்தை ஸ்ட்ரோக்காக விட்டார். அதற்கு அடுத்த 2வது பந்திலேயே மெஹிடி ஹாசன் வீசிய பந்தை பளார் என சிக்ஸருக்கு விளாசினார். அந்த ஷாட்டால் 101 மீட்டருக்கு பிரமாண்ட சிக்ஸருக்கு சென்றது. இதன்பின்னர் விக்கெட்கள் மறுமுணையில் சென்றுக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் உமேஷ் பயப்படவே இல்லை.

 2வது சிக்ஸர் விளாசல்

2வது சிக்ஸர் விளாசல்

மெஹிடி ஹாசன் வீசிய மற்றொரு ஓவரிலும் பந்தை சரியாக கணித்த அவர், மீண்டும் சிக்ஸருக்கு விளாசினார். இந்த முறையும் 100 மீட்டர்களுக்கு சென்றது. "ஏய் எப்புட்றா" என்பது போல இரு அணி வீரர்களுமே உமேஷ் யாதவை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் பார்த்தனர். இதற்கு காரணம் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் பேட்டிங் செய்யவே சிரமமாக இருந்தது. அப்போது முன்னணி பேட்ஸ்மேன்களே திணறினர். ஆனால் உமேஷ் மட்டும் 2 சிக்ஸர்களை விளாசினார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

உமேஷின் அதிரடியால் இந்திய அணி 404 ரன்களை குவித்தது. இதனால் அவரை டி20 பேட்ஸ்மேனாக இனி பதவி உயர்வு கொடுங்கள் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். கடினமான ஸ்கோரை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி 133 ரன்களுக்கெல்லாம் 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Thursday, December 15, 2022, 19:55 [IST]
Other articles published on Dec 15, 2022
English summary
Pacer Umesh yadav's 2 sixers in India vs bangladesh 1st Test leaves fans Shock, here is the details why
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X