
புரிந்து கொண்டேன்
தற்போது தனது உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியில் அதிக முறை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியவுடன் என்ன நடக்கும் என்று நான் முன்பே புரிந்து கொண்டேன். ஹர்திக் பாண்டியா ஆடிய விதம் உண்மையில் ஆச்சரியம் அளித்தது. அனைத்து அணிகளும் சிறந்த வீரர்களை தான் உலகக் கோப்பை அழைத்துச் செல்வார்கள்.

வாய்ப்புகள்
நான் அங்கு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அது எனது கையில் இல்லை. நான் கிரிக்கெட்டை எப்போதுமே ஒரு வாய்ப்பாகத்தான் பார்த்தேன். நான் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றால் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பேன்.அதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்னுடைய மாநில அணியில் விளையாட வேண்டும் என வாய்ப்புக்காக காத்திருப்பேன்.

காயம்
அதிலும் இல்லை என்றால் லோக்கல் கிரிக்கெட்டில் ஆவது விளையாடுவேன். என்னுடைய பணி என்பது தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நான் தேர்வு செய்யப்படுவேனா என்பது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்திய அணியில் டி20 அல்லது ஒரு நாள் போட்டி இருந்திருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கு காயம் ஏற்பட்டது.

தயாராக இருங்கள்
எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நான் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடுவேன். இதைத் தவிர எனக்கு வேறு எந்த கவலையும் இல்லை. இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என தெரியும். பேட்டிங், பந்துவீச்சு ஃபில்டிங் அனைத்திலும் பெஸ்ட்டாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்.என்னை தயாராக இருக்கும்படி இந்திய அணி நிர்வாகம் கூறியது.

முடிவே கிடையாது
ஆனால் நமது கிரிக்கெட் கட்டமைப்பு என்பது மிகவும் பலமான ஒன்று. அதில் வாய்ப்புக்காக பல பேர் காத்திருக்கிறார்கள். அதனால் நான் ஏற்கனவே சொன்னது போல் இந்தியா அணியில்லை என்றால் ஐபிஎல் அணி என கிடைக்கும் வாய்ப்பில் எனது திறமையை நிரூபித்துக் கொண்டே இருப்பேன். வாய்ப்புகளுக்கு முடிவே கிடையாது என்று வெங்கடேஷ் ஐயர் கூறினார்.