2 ரன்னுக்கு லன்ச் பிரேக்கா.. இதுக்கு பேங்க் ஆபிசர்களே தேவலாம்.. கலாய்த்த நெட்டிசன்ஸ்!

Posted By:
2 ரன்னுக்கு லன்ச் பிரேக்கா?..கலாய்த்த நெட்டிசன்ஸ்- வீடியோ

செஞ்சுரியன்: தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. இந்த போட்டியில் இந்திய ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

இந்தியா பேட்டிங் இறங்கிய தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. இதனால் 1 விக்கெட் இழப்பிற்கு 20.3 ஓவரில் எளிதாக 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கடைசியில் இரண்டு ரன் அடிக்கும் முன் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. நடுவர்களின் இந்த முடிவு வைரல் ஆகி இருக்கிறது.

வங்கி ஊழியர்கள்

சேவாக் இதுகுறித்து பேசியுள்ளார். அதில் ''இந்திய பேட்ஸ்மேன்களை அம்பயர், வங்கி ஊழியர்கள் நடத்துவது போல நடத்தி இருக்கிறார்கள். சாப்பிட்டு வாங்க என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

உனக்கு நீயே

இவர் இதுகுறித்து ''என்னது 2 ரன் எடுக்க விடாம பிரேக்கா. கிரிக்கெட்டுக்கு கிரிக்கெட்தான் எதிரி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் போச்சு

கிரிக்கெட் வீரர் ஆர் பி சிங் இந்திய வீரர்களை கலாய்த்துள்ளார். ''ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் சுத்துற திட்டம் எல்லாம் மோசமா போயிடுச்சே'' என்பது போல குறிப்பிட்டுள்ளார்.

செம்ம பாஸ்

இவர் ''அட 2 ரன் தேவைப்படுறப்ப லன்ச் பிரேக்கா. அட போங்கய்யா'' என கைதட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நான் மட்டும் இருந்திருந்தா

இவர் ''அம்பயர் இப்படி செய்வார் என்று தெரிந்து இருந்தால், நான் ரன்னை விட்டு கொடுத்து இருப்பேன்'' என்று ஆஸ்திரேலியா வீரர் செய்யும் காமெடியான பீல்டிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சாப்பாடு

இவர் அம்மா கிரிக்கெட் விளையாடும் போது கறிக்குழம்பு இருக்கு சாப்பிட வா என்று அழைத்தும் எல்லோரும் செல்வது போல கலாய்த்து இருக்கிறார்.

Story first published: Monday, February 5, 2018, 11:13 [IST]
Other articles published on Feb 5, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற