இந்த இந்திய வீரர் தான் கிரிக்கெட்டின் ரொனால்டோ.. புகழ்ந்து தள்ளிய பிரையன் லாரா!

Virat Kohli is 'Ronaldo' of Cricket - Lara

டெல்லி : இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா புகழாரம் சூட்டியுள்ளார்.

கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தன்னுடைய திறமைகளை எப்படித்தான் பட்டைத் தீட்டிக் கொள்கிறாரோ என்றும் அவர் வியப்பு தெரிவித்துள்ளார்.

எந்த நூற்றாண்டின் எந்த அணியிலும் பொருந்தும் அளவிலான திறமைகளை கொண்டவர் என்றும் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

 பல்வேறு வீரர்கள் வியப்பு

பல்வேறு வீரர்கள் வியப்பு

இந்திய அணியை சாதனைகளை நோக்கி நடைபோட வைத்துக் கொண்டிருப்பவர் கேப்டன் விராட் கோலி. சர்வதேச அளவில் அவரின் சாதனைகள் பல்வேறு முன்னாள், இன்னாள் வீரர்களின் பாராட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. விராட்டின் சாதனைகளை அவர்கள் வியப்புடன் உற்று நோக்குகின்றனர்.

 விராட் குறித்து பிரையன் லாரா புகழ்ச்சி

விராட் குறித்து பிரையன் லாரா புகழ்ச்சி

கால்பந்தாட்டத்தின் சூப்பர்ஸ்டாராக பார்க்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கிரிக்கெட் நகல் விராட் கோலி என்று மேற்கிந்திய தீவகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா புகழ்ந்துள்ளார்.

 திறமைகளை பட்டை தீட்டிக் கொள்கிறார்

திறமைகளை பட்டை தீட்டிக் கொள்கிறார்

தான் பங்குபெறும் வேலைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர் இந்திய கேப்டன் விராட் கோலி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விராட் தன்னுடைய திறமைகளை எவ்வாறு பட்டைத் தீட்டிக் கொள்கிறார் என்பது குறித்தும் லாரா வியப்பு தெரிவித்துள்ளார்.

 அர்ப்பணிப்பு உணர்வே வித்தியாசம்

அர்ப்பணிப்பு உணர்வே வித்தியாசம்

இந்திய அணி வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் ரோகித் ஷர்மாவை விட திறமையில் விராட் கோலி அதிகமானவர் இல்லை என்று தெரிவித்துள்ள லாரா, ஆனால் தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வால் மட்டுமே கோலி வித்தியாசப்படுவதாகவும் அதிக சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 மனவலிமை நம்ப முடியாதது

மனவலிமை நம்ப முடியாதது

விராட் கோலியின் உடல் தகுதி மிகவும் அபாரமானது என்று தெரிவித்துள்ள லாரா, அவரது மனவலிமையும் நம்ப முடியாத அளவில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 லாரா மேலும் புகழ்ச்சி

லாரா மேலும் புகழ்ச்சி

கடந்த 1970களில் விளையாடிய கிளைவ் லாய்ட்ஸ் மற்றும் 1948ல் விளையாடிய சர் டான் பிராட்மேன் போன்ற அனைத்து சகாப்தங்களின் வீரர்களுடனும் பொருந்திப் போகக் கூடியவர் விராட் கோலி எனவும் லாரா தெரிவித்துள்ளார்.

 சாதனை அறிய முடியாதது

சாதனை அறிய முடியாதது

விராட் கோலியின் பேட்டிங் திறமைகள் நம்ப முடியாதது என்று தெரிவித்துள்ள லாரா, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட புள்ளிகளை வைத்துள்ள அவரது சாதனை இதுவரை யாராலும் அறியப்படாதது என்றும் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Brian Lara praises Indian Captain Virat Kohli that he is a cricketing version of Cristiano Ronaldo
Story first published: Monday, December 16, 2019, 17:57 [IST]
Other articles published on Dec 16, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X