நானும் டோணியும் நண்பேன்டா... எங்களை யாராலும் பிரிக்க முடியாது... மனம் திறந்த கோஹ்லி!

Posted By:

ராஜ்கோட்: என்னையும், டோணியையும் பலர் பிரிக்க முயன்றார்கள், இப்போதும் கூட அந்த முயற்சி நடந்து வருகிறது என்று கோஹ்லி கூறியுள்ளார். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்டில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையில் நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கு பின் கோஹ்லி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக மிகவும் பக்குவமாக பேசினார்.

அதன்பின் நடந்த ''காபி வித் சாம்பியன்ஸ்'' என்ற நிகழ்வில் கோஹ்லி மிக முக்கியமான விஷயங்கள் பலவற்றை பேசினார். அப்போது அவர் தனக்கும் டோணிக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து மனம் திறந்தார் கோஹ்லி.

இதை ஏற்றுக் கொள்கிறேன்

இதை ஏற்றுக் கொள்கிறேன்

ராஜ்கோட்டில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, "இந்த தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன். இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இந்த போட்டியில் சரியாக விளையாட வில்லை. இது எங்களுடைய தவறுதான்" என்று கூறினார்.

காபி வித் கோஹ்லி

காபி வித் கோஹ்லி

இந்த நிலையில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பின்பு கோஹ்லி ''காபி வித் சாம்பியன்ஸ்'' என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். கவுரவ் கப்பூர் என்ற பிரபல தொகுப்பாளருடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோஹ்லி முதல்முறையாக கலந்து கொண்டு இருக்கிறார். அவரிடம் அவரது காதல் குறித்து, அவரது பிட்னஸ் குறித்து, டோணிக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

டோணி பற்றி பேசிய கோஹ்லி

டோணி பற்றி பேசிய கோஹ்லி

இந்த நிலையில் அவரிடம் டோணிக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியை மிகவும் இயல்பாக எதிர்கொண்ட கோஹ்லி "நானும் கோஹ்லியும் பெஸ்ட் பிரண்ட்ஸ். எங்க ரெண்டு பேரையும் நிரைய பேர் பிரிக்க முயற்சி பண்ணாங்க. எங்களுக்குள்ள சண்டைனு வந்த எந்த செய்தியையும் நாங்க படிக்கல. இப்போ இல்ல எப்பவுமே எங்களை பிரிக்க முடியாது'' என்று கூறினார்.

டோணி மீசை வச்ச குழந்தை

டோணி மீசை வச்ச குழந்தை

அவர் டோணி பற்றி மேலும் கூறுகையில் ''டோணி என்னை திட்டி என்கூட சண்டை போடுறதா நிறைய பேர் சொல்லி இருக்காங்க . அவருக்கு கோவமே வராது. அவரையும் சேர்த்து அவங்க வீட்ல ரெண்டு குழந்தைங்க.'' என்றார். மேலும் ''எனக்கு அந்த ரெண்டு குழந்தைகளில் டோணியை விட அவர் குட்டி பெண்ணைத்தான் ரொம்ப பிடிக்கும்'' என்று கிண்டலாக கூறினார்.

Story first published: Monday, November 6, 2017, 13:22 [IST]
Other articles published on Nov 6, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற