For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி.. வெளுத்து வாங்கிய வார்னர்.. அருமையான தொடக்கம்

கொல்கத்தா:கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வார்ன்ர், பெர்ஸ்டோவ் அருமையான துவக்கம் தந்தனர்.

கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு ஆடியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

காயம் காரணமாக ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கவில்லை. இதையடுத்து புவனேஷ்வர் குமார் கேப்டனாக களமிறங்கினார்.

1
45758
பவுண்டரிகளாக பறந்தன

பவுண்டரிகளாக பறந்தன

தொடக்க விக்கெட்டுக்கு வார்னரும், பெர்ஸ்டோவும் களம் கண்டனர். இருவரும் கொல்கத்தா பந்துகளை சிதறடித்தனர். ஒரு பக்கம் பெர்ஸ்டோவ் நிதானமாக ஆட, மறு பக்கம் வார்னர் வெளுத்து கட்டினார்.

தேவையா இந்த ரிவ்யூ? தினேஷ் கார்த்திக்கை கலாய்த்த வர்ணனையாளர்கள்

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

பவுண்டரிகளை பந்துகளை அவர் பறக்கவிட்டார். பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிளாக சிதறடித்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்தனர்.

118 ரன்னில் விக்கெட்

118 ரன்னில் விக்கெட்

இந்த ஜோடி எளிதாக 100 ரன்களை கடந்தது.ஸ்கோர் 118 ரன்களை எட்டியபோது பெர்ஸ்டோவ், சாவ்லா பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அதிகமான ரன்ரேட்

அதிகமான ரன்ரேட்

இருவரும் அமைத்து கொடுத்த அருமையான தொடக்கத்தால் அணியின் ரன்ரேட்டும் எகிறியது. ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற விகிதத்தில் இருந்ததால் ரன்ரேட்டும் முதல் ஓவரில் இருந்தே உச்சகட்டத்தில் தான் இருந்தது.

Story first published: Sunday, March 24, 2019, 17:38 [IST]
Other articles published on Mar 24, 2019
English summary
warner and bairstow opened the bat very well against Kolkata knight riders in ipl.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X