For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதலாவது வீரர் கிறிஸ் கெய்ல்!!

By Mathi

கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இரட்டை சதமடித்த முதலாவது வீரர் என்ற சரித்திரத்தைப் படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் 147 பந்துகளை எதிர்கொண்டு 215 ரன்களைக் குவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 1996ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் கிறிஸ்டென், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 188 ரன்கள் குவித்ததுதான் அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது.

WC 2015: Chris Gayle hits first 200 of WC

அதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு கராச்சியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ஸ்ட் 181 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.

இந்த சாதனைகளை முறியடித்துள்ளார் கெய்ல். ஜிம்பாம்ப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 215 ரன்கள் குவித்து உலகக் கோப்பை வரலாற்றில் இரட்டைச் சதமடித்த முதலாவது வீரர் என்ற சரித்திரத்தைப் படைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல். இதில் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

அத்துடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 372 ரன்களைக் குவித்த முதலாவது ஜோடி என்ற சாதனையையும் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் -சாமுவேல்ஸ் ஜோடி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 24, 2015, 14:27 [IST]
Other articles published on Feb 24, 2015
English summary
Explosive West Indian opening batsman Chris Gayle became the first batsman in the history of World Cup cricket to score a double hundred. Chris Gayle scored 215 off 147 balls (10 fours, 16 sixes) against Zimbabwe at Manuka Oval in Canberra before getting caught in the final delivery of the innings. He also put up 372-run partnership for the second wicket, the highest for any wicket in one-day cricket. West Indies ended at 372/2 in 50 overs against a hapless Zimbabwean attack.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X