அங்க போயும் பிரச்சனையா?.. சாப்பாடு சரியில்லை.. வெஜ்தான் வேணும்.. அடம்பிடித்த இந்திய வீரர்கள்!

Posted By:
தென் ஆப்ரிக்காவில் சாப்பாடு சரி இல்லையென சண்டை போட்ட இந்திய வீரர்கள்- வீடியோ

செஞ்சுரியன்: இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் கிடைக்கும் உணவுகள் சரியில்லை என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இதனால் தற்போது அவர்களுக்கு தனியாக உணவுகள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது.
ஒருநாள் தொடரை மிகவும் எளிதாக வென்று இருக்கிறது.

ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இன்று முதல் டி-20 போட்டிகள் நடக்க இருக்கிறது.

சரியில்லை

சரியில்லை

இதில் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு சரியில்லை என்று கூறப்படுகிறது. இந்திய வீரர்களின் உடல் நிலைக்கு ஏற்றதாக இந்த உணவுகள் இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் சாப்பாடு சரியில்லை என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

சைவ உணவு

சைவ உணவு

அதேபோல் சில வீரர்கள் சைவ உணவு மட்டும் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். இந்திய அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் அசைவம் சாப்பிட கூடியவர்கள். ஆனால் சிலர் மட்டும் சைவ உணவு உண்ணக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றினார்கள்

மாற்றினார்கள்

இந்த புகாரை அடுத்து சாப்பாடு சமைக்க இந்தியாவில் இருந்து ஆட்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் பிரபல உணவகம் ஒன்று இதற்காக ஆட்களை அனுப்பி இருக்கிறது. அவர்கள் இந்திய வீரர்களுக்கு மட்டும் தனியாக உணவு சமைத்துக் கொடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் தடவை

முதல் தடவை

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட வந்த வீரர்களில் முதல்முறையாக இந்திய வீரர்களுக்கு மட்டுமே தனி உணவு தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியர்களின் உணவுப் பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Story first published: Sunday, February 18, 2018, 13:33 [IST]
Other articles published on Feb 18, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற