மைக் 1 மைக் 2 மைக் 3.. நம்ம முக்கியமான ஆப்ரேஷன் பண்ண போறோம்.. திட்டம் போடும் தென்னாப்பிரிக்கா!

Posted By:
இந்தியாவிற்கு பயந்து புதிய திட்டம் வகுக்கும் தென் ஆப்ரிக்கா- வீடியோ

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தத் தொடர் வெற்றிகள் காரணமாக இந்தியா ஒருநாள் தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியை வென்றால் இந்தியா தொடரை வென்றுவிடும்.

இந்த நிலையில் இந்திய அணியின் சூழலை சமாளிக்கத் தென்னாப்பிரிக்கா புதிய திட்டம் போட உள்ளது. முக்கியமாக ஸ்பின் பவுலர்களை சமாளிக்கத் திட்டம் வகுக்க உள்ளது.

ஓவர் ஆசை

ஓவர் ஆசை

தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றது போலவே ஒருநாள் தொடரையும் வென்று விடலாம் என்று நினைத்தது. முக்கியமாக ஒருநாள் தொடரில் இந்தியாவை வாஷ் அவுட் செய்வோம் என்றும் கூறினார்கள். ஆனால் இந்தியா வரிசையாக மூன்று ஒருநாள் போட்டியை வென்று கிலி ஏற்படுத்தியுள்ளது.

சுழற்பந்து

சுழற்பந்து

அனைத்துப் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவிற்கு பிரச்சனையாக இருந்தது இந்திய சுழல் மட்டுமே. முக்கியமாக ரிஸ்ட் பவுலிங் அந்த அணிக்கு மிகவும் கடினமாக ஒன்றாகும். அதேபோல் முக்கியமான வீரர்களும் அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள்.

எதுவும் நடக்கவில்லை

எதுவும் நடக்கவில்லை

இதுகுறித்து ஜே பி டுமினி பேட்டி அளித்துள்ளார். அதில் ''நாங்கள் சாஹல், குல்தீப்பிற்கு எதிராக நிறையத் திட்டம் தீட்டினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மூன்றாவது போட்டியில் அவர்களை எப்படிச் சமாளிக்கலாம் என்று நினைத்தோம் ஆனால் அதுவும் கைகூடவில்லை'' என்றுள்ளார்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

மேலும் ''நாங்கள் புதிய திட்டம் வகுக்க இருக்கிறோம். முக்கியமாக அவர்கள் பந்தில் நாங்கள் சிங்கிள் எடுக்கவே முடியவில்லை. எப்படியாவது 4வது போட்டிக்கு முன் புதிய திட்டத்தை வகுப்போம். ஏ பி டி வில்லியர்ஸ் அணிக்குத் திரும்புவதும் எங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்'' என்றுள்ளார்.

Story first published: Thursday, February 8, 2018, 15:31 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற