For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பில்லை? கத்தாரில் இருந்து வந்த ஆதரவு.. கடல் கடந்தும் நிற்கும் ரசிகர்கள்!

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலமாக இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கான ஆதரவு அதிகரித்து கொண்டே செல்கிறது. சஞ்சு சாம்சன் ஒவ்வொரு போட்டியில் தவிர்க்கப்படும் போதும், அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது.

அதுமட்டுமல்லாமல் 2015ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாகவே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டாலும், இதுவரை மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது?? கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது??

ஏன் இடமில்லை?

ஏன் இடமில்லை?

தொடர்ந்து இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தோனி ஸ்டைலில் சொன்னால், சஞ்சு சாம்சன் விளையாடாமலேயே தோல்வியை சந்தித்து வந்தார். ரிஷப் பன்ட்-க்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில், 50 சதவிகிதம் கூட சஞ்சு சாம்சனுக்கு கொடுக்கப்படவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் ரசிகர்கள்

சஞ்சு சாம்சன் ரசிகர்கள்

இதனிடையே கேரளாவைச் சேர்ந்த வீரர் என்பதால் சஞ்சு சாம்சனை பிசிசிஐ தவிர்த்து வருவதாக ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் அண்மையில் இந்தியா ஏ அணிக்காக சென்னையில் சஞ்சு சாம்சன் விளையாடிய போது, திரளான ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக மைதானத்தில் கூடியது அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. நியூசிலாந்து தொடரிலும் சஞ்சு சாம்சனின் புகைப்படங்களை ஏந்தி ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கத்தாரில் ஆதரவு

கத்தாரில் ஆதரவு

இந்த நிலையில் கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். போட்டிகள் நடைபெற்று வரும் மைதானங்களில் சஞ்சு சாம்சன் படம் இடம் பெற்றுள்ள போஸ்டர்களை ரசிகர்கள் தாங்கி நிற்பது கவனம் பெற்றுள்ளது. கடல் கடந்து, விளையாட்டு கடந்து ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் நம்பிக்கை

ரசிகர்கள் நம்பிக்கை

இதனால் வரும் போட்டிகளில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக எப்போதும் எங்கோ பிறந்து எந்த பின்னணியும் இல்லாத வீரர்களே அதிக கோப்பைகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளனர். அதனால் விரைவில் சஞ்சு சாம்சன் இந்திய அணியால் தவிர்க்க முடியாத வீரராக உருவாகுவார் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, November 29, 2022, 0:54 [IST]
Other articles published on Nov 29, 2022
English summary
Fans have come out in support of the young Indian cricketer Sanju Samson in the FIFA World Cup 2022 in Qatar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X