வெற்றிக்கு ரசல் காரணம்… சொல்வது ஹோல்டர்..!! தோல்விக்கு பேட்ஸ் மென்கள் பொறுப்பு… புலம்பும் சர்பிராஸ்

நாட்டிங்ஹாம்: ரசல் ஏற்படுத்திய மாற்றத்தால் அணிக்கு வெற்றி கிடைத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடரின் 2வது போட்டியான நேற்று, சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகளும் மோதின. போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிக பட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

உலக கோப்பையில் பலமுறை குறைந்த ஸ்கோர் செய்த பாகிஸ்தான்..!! இப்படியும் ஒரு ரெக்கார்டா...?

 கெயில் அரைசதம்

கெயில் அரைசதம்

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிக பட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

 சிறப்பான துவக்கம்

சிறப்பான துவக்கம்

போட்டி முடிந்து வெற்றி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் கூறியதாவது: போட்டியில் எங்களது வீரர்கள் சிறப்பான துவக்கம் அளித்தனர். அதிலும் குறிப்பாக தொடக்க ஓவர்களிலே விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 ரசலின் தாக்கம்

ரசலின் தாக்கம்

அதனை தான் பந்துவீச்சாளர்களிடம் இருந்து நான் எதிர்பார்த்தேன். தாமஸ் மிக சிறப்பாக பந்துவீசினார். அதுமட்டுமின்றி எங்களது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரான ரசல் உள்ளார்.

 சக்தி இருக்கிறது

சக்தி இருக்கிறது

அவர் இந்த போட்டியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினார். அவருடைய பேட்டிங் அல்லது பவுலிங் என ஏதாவது ஒன்றில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித்தரும் சிறப்பான சக்தி அவரிடம் உள்ளது என்று ஹோல்டர் கூறினார்.

 டாசில் விழுந்த முதல் அடி

டாசில் விழுந்த முதல் அடி

போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது: இந்த மைதானத்தில் டாஸ் தோற்றது எங்களுக்கு முதல் அடி. ஏனெனில் இதுபோன்ற மைதானங்களில் முதலில் விக்கெட்டை இழந்தால் பிறகு அதிலிருந்து மீள்வது கடினம்.

 ஷார்ட் பிட்ச் பவுலிங்

ஷார்ட் பிட்ச் பவுலிங்

எங்களது பேட்ஸ்மேன்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். பேட்ஸ்மேன்களின் இந்த பொறுப்பற்ற ஆட்டமே இந்த தோல்வி அடைய காரணம். முகமது அமீர் சிறப்பாக பந்துவீசினார். இங்கிலாந்து மைதானத்தில் அவர் எப்போதுமே சிறப்பாக வீசிவருகிறார் என்று கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
West indies captain holder and pakistan captain sarfaraz ahmed about nottingham match.
Story first published: Saturday, June 1, 2019, 13:47 [IST]
Other articles published on Jun 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X