மைதானத்திற்குள் செல்போனுக்கு ஏன் அனுமதி இல்லை.. வியக்க வைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Posted By:

சென்னை: சென்னை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை பார்க்க செல்லும் மக்கள் செல்போன் எடுத்து செல்ல கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேமராவும் எடுத்து செல்ல கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது. சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடக்கிறது.

இந்த போட்டிக்கு எதிராக காவிரிக்காக போராடி வரும் மக்கள் குரல் கொடுத்துள்ளனர். போட்டியை காண செல்ல இருக்கும் ரசிகர்களுக்கு எதிராக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஏன் போலீஸ்

ஏன் போலீஸ்

மொத்தம் 3000 போலீஸ் இதில் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். இதில் மைதானத்திற்கு வெளியே 500க்கும் அதிகமான போலீஸ்கள் காவலில் இருப்பார்கள். உள்ளே 2000 போலீஸ்கள் வரை மக்களை சுற்றி இருப்பார்கள். 500 பேர் வீரர்களுடன் பெவிலியனில் பாதுகாப்பிற்காக இருப்பார்கள். 500 போலீஸ்கள் பவுண்டரி லைனுக்கு அருகில், ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்லாத வகையில் காவல் காப்பார்கள்.

ஏன் வாட்டர் கேன்

ஏன் வாட்டர் கேன்

அதே போல் வாட்டர் கேன் தடை செய்யப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டுள்ளது. போட்டியின் போது, வீரர்கள் மீது ரசிகர்கள் பாட்டில்களை தூக்கி எறிய கூடாது என்பதற்காக இப்படி சட்டம் விதித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு இது போல வீரர்கள் மீது பாட்டில் வீசும் சம்பவங்கள் அதிகமாக நடந்து இருக்கிறது. ஆனால் உள்ளே பாக்கெட் தண்ணீர் வழங்கப்படும்.

பெயிண்ட் அடிக்க முடியாது

பெயிண்ட் அடிக்க முடியாது

மைதானத்திற்குள் சென்ற பின் கூட ரசிகர்கள் எந்த விதமான பெயிண்ட்டும் அடிக்க முடியாது. முகத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக வரைய முடியாது. மேலும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக செய்யப்படும் கோஷங்கள் டீவியில் காட்டப்படாது என்றும் கூறப்படுகிறது.

போன் ஏன் அனுமதி இல்லை

போன் ஏன் அனுமதி இல்லை

போன் அனுமதிக்காததற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. உள்ளே இருந்து கொண்டு ரசிகர்கள் வெளியே உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது, மக்களை போராட்டம் செய்ய சமூக வலைத்தளம் மூலம் அழைக்க கூடாது, வீரர்களை புகைப்படம் எடுத்து திட்ட கூடாது என்று நிறைய விஷயங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Security concerns for Chennai IPL match tighten after Cauvery protest. Police gave certain regulation to avoid Cauvery protest inside the stadium.
Story first published: Tuesday, April 10, 2018, 12:00 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற