For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிப் போட்டு வாயை மூடிட்டு பேட்டிங் மட்டும் பண்ணுங்க.. கோலியை அதிர வைத்த வெ.இண்டீஸ் வீரர்!

துபாய் : விராட் கோலி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். களத்தில் அவரது ஆக்ரோஷமான குணம் அனைவரும் அறிந்த ஒன்றே.

2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் உடன் அவர் கடும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

இருவரும் களத்தில் ஒருவரை, ஒருவர் கடுமையாக சீண்டி பரபரப்பை கிளப்பி வந்தனர்.

சிஎஸ்கேவுக்கு தோனின்னா எங்களுக்கு இவர்.. இது எப்படி இருக்கு? ஜாம்பவானை கூட்டி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்சிஎஸ்கேவுக்கு தோனின்னா எங்களுக்கு இவர்.. இது எப்படி இருக்கு? ஜாம்பவானை கூட்டி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்

அந்த சீண்டல்

அந்த சீண்டல்

அப்போது விராட் கோலி 2017இல் தன்னை வில்லியம்ஸ் அவுட் ஆக்கியதை நினைவு கூர்ந்து, அவரது பந்துவீச்சில் ரன் அடித்து, நோட்புக்கில் அவரது பந்துவீச்சை அடிக்க வேண்டும் என எழுதி வைத்து செய்ததாக சைகையில் தெரிவித்தார். வில்லியம்ஸ் அதன் பின் அவரை அவுட் ஆக்கி வாயில் விரல் வைத்து பேசக் கூடாது என சைகை செய்தார்.

கேஸ்ரிக் வில்லியம்ஸ்

கேஸ்ரிக் வில்லியம்ஸ்

தற்போது கேஸ்ரிக் வில்லியம்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2019 இந்திய சுற்றுப்பயணத்தில் என்ன நடந்தது என தன் பார்வையில் இருந்து விவரித்தார். அதில் தான் விராட் கோலியை தான் வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

2019ஆம் ஆண்டு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் முதல் போட்டியில் தான் இருவருக்கும் இடையே சீண்டல்கள் துவங்கின. அது பற்றி வில்லியம்ஸ் பேசினார். "முதல் போட்டியில் பேட்டிங் ஆட வந்த போது நேராக என்னிடம் வந்தார்."

ஆராய்ச்சி செய்துள்ளாரா?

ஆராய்ச்சி செய்துள்ளாரா?

"கடந்த முறை ஜமைக்காவில் என்னை பவுல்டு முறையில் என்னை வீழ்த்தினாய். இப்போது அது நடக்காது என்றார். நான், இது 2017இல் நடந்தது, இது 2019. இவர் இதை உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துள்ளாரா? இந்த நபரை நம்பவே முடியவில்லையே என தோன்றியது"

என்ன நடக்கிறது?

என்ன நடக்கிறது?

"நான் பந்து வீசினேன். லெக் திசையில் இருந்து ஒருவர் பந்தை எடுத்து வீசினார். நான் பந்தை பிடிக்க ஓடினேன், அவர் சிங்கிள் எடுக்க ஓடினார். அவர் மீது மோத இருந்தேன். எனினும், நின்று அவர் செல்ல வழி விட்டேன். அவர் அம்பயரிடம் "என்ன நடக்கிறது?" என புகார் கூறினார்."

மன்னிப்பு கேட்டேன்

மன்னிப்பு கேட்டேன்

"நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். வேண்டுமென்றே செய்யவில்லை. அதன் பின் அவர் ஆரம்பித்தார். அவர் பேசியதை நான் மீண்டும் கூற விரும்பவில்லை. எல்லா விஷயங்களையும் அவர் பேசினார். நான், நீங்கள் கொஞ்சம் சும்மா இருக்க முடியுமா? என கேட்டேன்."

ஜிப் போட்டு மூடிக் கொண்டு..

ஜிப் போட்டு மூடிக் கொண்டு..

"நான் பின்னே நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது அவர் என்னிடம் "இது இன்று நடக்காது. நீ என்னை அவுட் ஆக்க நான் விடமாட்டேன். நிச்சயம் நடக்காது" என்றார். நான், "நீங்கள் வாயை ஜிப் போட்டு மூடிக் கொண்டு, பேட்டிங் செய்ய முடியுமா?" என்னை விட்டு விடுங்கள் என்று கூறினேன்." என்றார் வில்லியம்ஸ்.

நோட்புக் கொண்டாட்டம்

நோட்புக் கொண்டாட்டம்

அந்தப் போட்டியில் கோலி, வில்லியம்ஸ் பந்துவீச்சில் ரன் குவித்தார். முடிவில் தன் பேட்டை வைத்து நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு அடுத்த போட்டியில் வில்லியம்ஸ் குறி வைத்து விராட் கோலியை வீழ்த்தினார்.

பதிலடி தந்த வீரர்

பதிலடி தந்த வீரர்

அதன் பின் டெஸ்ட் தொடரிலும் இந்த மோதல் தொடர்ந்தது. கோலி அவரது பந்தில் சிக்ஸ் அடித்தார். அடித்து விட்டு அதை கொண்டாடினார். கோலியை இந்த அளவுக்கு சீண்டி, பதிலடி கொடுத்த ஒரே வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் மட்டுமே.

Story first published: Monday, September 14, 2020, 14:41 [IST]
Other articles published on Sep 14, 2020
English summary
This is what Kesrick Williams told to Virat Kohli in 2019 tour after Kohli started sledging him. He also got his wicket in next match. Williams explained what happened in his point of view.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X