நான் ஏன் விராட் கோலி, ரோகித்தை புகழக்கூடாது... அவங்ககிட்ட விஷயம் இருக்கு.. பாராட்டிய அக்தர்

கராச்சி : சமீபத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணியினர் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் பாகிஸ்தான் பௌலர் சோயிப் அக்தர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை புகழ்ந்திருந்தார்.

பயிற்சியை தொடங்கிய IPL அணி வீரர்கள்

இதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். சமூக வலைதளங்கள் மூலம் சோயிப் அக்தரை திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள சோயிப் அக்தர், சர்வதேச அளவில் விராட் கோலிக்கு இணையான வீரர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு முடிவோடத்தான் இருக்காரு விராட் கோலி... டைவ் அடித்து கேட்ச் பிடித்த கேப்டன்

சிறப்பான சோயிப் அக்தர்

சிறப்பான சோயிப் அக்தர்

முன்னாள் பாகிஸ்தான் பௌலர் சோயிப் அக்தர் தன்னுடைய கேரியரில் சிறப்பான பல சாதனைகளை புரிந்தவர். சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் கவனம் ஈர்த்தவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், தொடர்ந்து கிரிக்கெட் குறித்த விமர்சனங்களை செய்து வருகிறார். யூடியூப் மூலமும் பல்வேறு தளங்களிலும் அவர் விமர்சனம் செய்து வருகிறார்.

ரோகித், விராட்டை புகழ்ந்த அக்தர்

ரோகித், விராட்டை புகழ்ந்த அக்தர்

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குறித்து விமர்சித்த சோயிப் அக்தர், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து பேசியுள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் அக்தரை வறுத்தெடுத்துவிட்டனர்.

விராட், ரோகித்திடம் விஷயம் உள்ளது

விராட், ரோகித்திடம் விஷயம் உள்ளது

இந்நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு பேசியுள்ள அக்தர் தான் ஏன் விராட் கோலியையும் ரோகித் சர்மாவையும் புகழக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளர். இநத தலைமுறையின் சிறப்பான வீரர்கள் அவர்கள் என்று கூறியுள்ள அக்தர், பாகிஸ்தான் அல்லது உலக அளவில் எந்த வீரராவது கோலியின் சாதனைகளுக்கு அருகில் வரமுடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த வீரராவது நெருங்க முடியுமா?

எந்த வீரராவது நெருங்க முடியுமா?

கோபப்படுவதற்கும் தன்னை விமர்சனம் செய்வதற்கும் முன்னதாக கோலியின் சாதனைகளை நாம் பார்க்க வேண்டும் என்றும் தன்னுடைய கேரியரில் 70 சதங்களை விராட் வைத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் எத்தனை தொடர்களை அவர் இந்தியாவிற்காக வென்று கொடுத்துள்ளார் என்று கூறியுள்ள அக்தர், கோலி மற்றும் ரோகித்தை புகழ்ந்தால் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Virat Kohli and Rohit Sharma are performing all the time, Why shouldn't we praise them? -Akhtar
Story first published: Friday, September 4, 2020, 10:11 [IST]
Other articles published on Sep 4, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X