3 வருஷம் ஜாலியா இருக்கப் போறேன்... அப்பறம் பார்த்துக்கலாம்.. கோஹ்லி

Posted By:

விசாகப்பட்டனம்: 3 வருஷம் எனது பேட்டிங்கை அனுபவித்து ஜாலியாக விளையாடப் போகிறேன். அதற்குப் பிறகுதான் கேப்டன் பதவிக்கு எனக்கு சுமையா, சுகமா என்பது குறித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

அணிக்கு உள்ள அழுத்தங்கள், அணி மீதான எதிர்பார்ப்புகளை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அதை அனுபவித்து ரசித்து கேஷுவலாக எடுத்துக் கொள்கிறேன். இப்போதைக்கு எனது கேப்டன் பதவியால் எனக்கு அழுத்தமா இல்லையா என்பது குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.

3 வருடம் போகட்டும். பிறகுதான் கேப்டன் பதவியால் எனக்கு பாதிப்பா, நல்லதா என்பது குறித்து நான் கவலைப்படப் போகிறேன். அதுவரைக்கும் அனுபவித்து ஆடப் போகிறேன் என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு நோ பிராப்ளம்

இப்போதைக்கு நோ பிராப்ளம்

2வது டெஸ்ட் போட்டியின் முடிவில் செய்தியாளர்களிடம் கோஹ்லி பேசுகையில், இப்போதைக்கு கேப்டன் பதவியின் பாரம் குறித்து நான் கவலைப்படவில்லை. அதை பிரச்சினையாக கருதவே இல்லை. எல்லாமே நல்லாதான் இருக்கு.

 பொறுப்பு அதிகம்தான்

பொறுப்பு அதிகம்தான்

நிச்சயம் கேப்டன் பதவி என்பதில் பொறுப்பு அதிகம்தான். அதிலும் 5 பேட்ஸ்மேனை வைத்துக் கொண்டு ஆடும்போது நிச்சயம் நெருக்கடியும் இருக்கும்.

ஜாலியாக விளையாடுவதற்குத் தடை இல்லை

ஜாலியாக விளையாடுவதற்குத் தடை இல்லை

அதேசமயம், அதற்காக நமது விளையாட்டைத் தடுக்க முடியாது. அது இயல்பாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நானும் ஜாலியாக எனது இயல்புக்கேற்ப அடித்து ஆடுகிறேன்.

பழைய முறையில் நம்பிக்கை உண்டு

பழைய முறையில் நம்பிக்கை உண்டு

எனக்கு பழைய பாணியில் விளையாடுவதில் இன்னும் கூட நம்பிக்கை உண்டு. அதற்காக நான் தயங்குவதே இல்லை. வருத்தப்படுவதும் இல்லை. ஸ்கோர் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும்போது பழைய பாணியில் தொடருவதை நான் விரும்புகிறேன் என்றார் கோஹ்லி.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் டிரா செய்து, 2வது போட்டியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 21, 2016, 19:20 [IST]
Other articles published on Nov 21, 2016

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற