For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை டி20: வாழ்வா சாவா போட்டியில் ஆஸ்திரேலியா-வங்கதேசம் இன்று மோதல்

By Veera Kumar

பெங்களூர்: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், பெங்களூரில் இன்று நடைபெறும் சூப்பர்-10 சுற்றுக்கான போட்டியில் ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இப்போட்டியில் வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகின்றன.

ஆஸ்திரேலியா தனது தொடக்க ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும் தோற்றுள்ளது.

எனவே, இவ்விரு அணிகளுக்கும் இன்றைய போட்டி வாழ்வா-சாவா? ஆட்டம் போன்றது. இதில் மண்ணை கவ்வும் அணி அநேகமாக அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்படும்.

முக்கிய பவுலர்கள் இல்லை

முக்கிய பவுலர்கள் இல்லை

வங்கதேச அணியின் முன்னணி பந்து வீச்சாளர் டஸ்கின் அகமது மற்றும் அர்பாத் சன்னி ஆகியோர், பந்தை எறிவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பந்து வீச அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

பேட்டிங் சொர்க்கம்

பேட்டிங் சொர்க்கம்

போட்டி நடைபெறும் பெங்களூர், சின்னசாமி ஸ்டேடியம், பேட்டிங் சொர்க்கம். இங்கு முதலில் பேட் செய்யும் அணியின் சராசரி 196 என்ற அளவில் இருப்பதால் டாசில் வெல்லும் அணி பேட்டிங்கையே தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

நல்ல பிட்ச்

நல்ல பிட்ச்

பெங்களூர் பிட்ச் தன்மை, பவுன்சருக்கும், வேகத்துக்கும் ஒத்துழைக்கும். கொல்கத்தா போல மிக அதிகமாக சுழற்பந்துக்கு ஒத்துழைக்காது என்றபோதிலும், நல்லபடியாக ஸ்பின் செய்யக்கூடிய பவுலர்கள், விக்கெட்டுகளை கொள்முதல் செய்ய வாய்ப்புண்டு.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

ஆஸ்திரேலிய அணியில் சுழல் பந்து வீச்சாளர் அஸ்தான் அகர் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஜான் ஹேஸ்டிங்சுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கு வாய்ப்பு இல்லை

மழைக்கு வாய்ப்பு இல்லை

பெங்களூரில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனவும், காற்றில் ஈரப்பதம் 29 சதவீதம் அளவுக்கு இருக்கும் எனவும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இல்லை. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Story first published: Monday, March 21, 2016, 10:34 [IST]
Other articles published on Mar 21, 2016
English summary
With an opening Super 10 phase loss each, both Australia and Bangladesh MUST win this match or their World T20 campaign is pretty much kaput.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X