அஸ்வின் திரும்பி வருவதே கஷ்டம்தான்.. இந்தியாவிற்கு இனி எல்லாமே ரிஸ்ட் ஸ்பின்னர்கள்தான்!

Posted By:
இந்திய அணியில் சுழல் பந்துவீச்சில் கலக்கும் இரட்டையர்கள்- வீடியோ

கேப்டவுன்: யாரால் நம்ப முடியும்...? தென்னாப்பிரிக்கா அணி, கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் என யாராலும் நம்ப முடியாத ஆச்சர்யம்தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. தன் சொந்த மண்ணில் 'அதார் உதார்' அணியாக இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை வரிசையாக 4 போட்டியில் (கடைசி டெஸ்டும் சேர்த்து) இந்தியா வீழ்த்தி இருக்கிறது.

தொட்டு பாரு தாறுமாறு என வேகமாக பந்து வீசும் ஏழு அடி தென்னாப்பிரிக்க வீரர்கள் 5 அடி சாஹல், குல்தீப் ஜோடியிடம் சுருண்டு விழுந்து இருக்கிறார்கள். கும்ப்ளே, ஹர்பஜன் காலம் போன பின் இந்திய அணி நிலையான ஸ்பின் பவுலருக்கு கஷ்டப்பட்டது.

அந்த இடத்திற்கு அஸ்வினும், ஜடேஜாவும் வருவார்கள் என்று நம்பிக்கை அளித்தது. ஆனால் நாங்கள்தான் அந்த இடத்திற்கு என்று தற்போது சாஹல், குல்தீப் ஜோடி நிரூபித்து இருக்கிறது.

கோஹ்லியின் திட்டம்

கோஹ்லியின் திட்டம்

அஸ்வினையும், ஜடேஜாவும் அணியில் இருந்து எடுத்த போது கோஹ்லி மீது விமர்சனம் வந்தது. டோணியின் ஆட்களை கோஹ்லி சேர்த்துக் கொள்வதில்லை, தமிழக வீரர்களுக்கு மதிப்பில்லை என்றும் பேச்சு வந்தது. ஆனால் தான் எடுத்த முடிவு சரிதான் என்று கோஹ்லி நிரூபித்து இருக்கிறார். ஆம் இந்திய அணிக்கு ஸ்பின் இரட்டையர்களை இவர் காலம் வழங்கிவிட்டது.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

இவர்கள் இருவருக்கும் இரண்டும் பலம் இருக்கிறது, ஒன்று இவர்கள் விரல் மூலம் பந்து போடாமல், மணிக்கட்டு மூலம் சுழற்றி பந்து வீசுவார்கள். இரண்டாவது விஷயம்தான் முக்கியம். இவர்கள் ஒவ்வொரு பிட்சுக்கும் பந்து வீசும் வேகத்தை மாற்றுகிறார்கள். முதல் இரண்டு போட்டியில் போட்ட வேகத்தில் கடைசி போட்டியில் பந்து வீசவில்லை.

கீழே போடுகிறார்கள்

கீழே போடுகிறார்கள்

முக்கியமாக இவர்கள் பந்தை எவ்வளவு கீழே வீச முடியுமோ அவ்வளவு கீழே வீசுகிறார்கள். உயரம் குறைவாக இருக்கும் இந்திய வீரர்களுக்கு தென்னாப்பிரிக்கா பவுன்சர் வீசி கடுப்பேற்றும். அதை அப்படியே மாற்றி உயரமான வீரர்களுக்கு இந்திய ஸ்பின் பவுலர்கள் 'லோ பால்' போடுகிறார்கள். மிகவும் கீழே வரும் பந்து திரும்புவதை சமாளிக்க தென்னாப்பிரிக்கா வீரர்கள் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.

சரியாகவில்லை

சரியாகவில்லை

ஆனாலும் ரகசியம் இங்குதான் இருக்கிறது. இதை எல்லாம் தென்னாப்பிரிக்க ஸ்பின் பவுலர்களும் செய்தார்கள். முக்கியமாக இம்ரான் தாஹிர் 90கிமீல் இருந்து குறைந்து 70கிமீ வேகத்தில் பந்து வீசினார். ஆனால் கோஹ்லி செஞ்சுரி அடித்ததுதான் மிச்சம். இன்னும் இந்தியர்கள் போல் ஸ்லோ பாலில் அவர்களால் பந்தை சுழல வைக்க முடியவில்லை என்பதே உண்மை.

இனி என்ன நடக்கும்

இனி என்ன நடக்கும்

இதோ இவர்கள்தான் இனி ஒருநாள் அணிக்கு என்று உறுதியாகிவிட்டது. இப்போது பிரச்சனையே டெஸ்ட் அணிக்கும் இவர்களையே கோஹ்லி எடுப்பாரா என்பதுதான். இவர்களின் செயலை பார்த்தால் அப்படி ஒரு ஆச்சர்யம் நடக்க வெகு தூரம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பெரிய சாதனை

பெரிய சாதனை

இவர்கள் இருவர் மூலம் இந்திய அணி சாதனை ஒன்றைச் செய்ய இருக்கிறார்கள். ஆம் இந்த ஒருநாள் தொடரை வெல்ல இன்னும் ஒரு போட்டிதான் இருக்கிறது. மூன்றில் ஒரு வெற்றி கிடைத்தால் கூட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நடக்காதச் சாதனை தொடர் வெற்றி ஒன்று நம் கைகூடும்!

Story first published: Thursday, February 8, 2018, 13:28 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற