இந்தியாவிற்குக் கைகொடுக்கும் 'ரிஸ்ட் ஸ்பின்'.. என்ன ரகசியம் இருக்கிறது தெரியுமா?

Posted By:
இந்திய அணியில் சுழல் பந்துவீச்சில் கலக்கும் இரட்டையர்கள்- வீடியோ

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா நான்கு போட்டிகளை வென்று இருக்கிறது. வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.

அந்நாட்டின் பேட்ஸ்மேன்களுக்கே என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு நம் ஸ்பின் பவுலிங் இருக்கிறது. முக்கியமாக ரிஸ்ட் ஸ்பின் பவுலிங் இந்தியாவிற்குக் கைகொடுத்துள்ளது.

சாஹல், குல்தீப் ஜோடி இந்த ஸ்டைலை வைத்துத்தான் கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். உலகில் நடக்கும் அதிசயங்களில் இந்த ரிஸ்ட் ஸ்பின்னிங்கும் ஒன்று.

விளையாட வராது

விளையாட வராது

பொதுவாகவே தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஸ்பின் பவுலிங் விளையாட வராது. ரோஹித் எப்படி பவுன்சர் பந்துகளில் திணறுவாரோ அப்படித்தான் அவர்கள் திணறுவார்கள். முக்கியமாக ரிஸ்ட் ஸ்பின் என்றால் சுத்தம். சமீப காலங்களில் அவர்கள் ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் கூட விளையாடத் தொடங்கி இருக்கிறார்கள்.

ரிஸ்ட்

ரிஸ்ட்

ஸ்பின் பவுலிங்கில் இரண்டு வகையான முக்கிய பிரிவு இருக்கிறது. பந்தை விரல் மூலமாகச் சுற்றுவது பின்கர் ஸ்பின். அதற்குப் பதிலாக மணிக்கட்டைச் சுற்றி சுண்டு விரல் மூலம் பந்தை வெளியேற்றுவது ரிஸ்ட் ஸ்பின். இது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இரண்டு வகை

இரண்டு வகை

இதிலும் லெக் ஸ்பின் , சைனா மேன் ஸ்பின் என்று இரண்டு இருக்கிறது. இதில் லெக் ஸ்பின் எதிர் கடிகார முள் திசையில் ஸ்விங் ஆகும். இது வலது கை பந்து வீச்சாளர்கள் மூலம் எறியப்படும். இதுதான் சாஹல் போடும் ஸ்டைல். சைனா மேன் என்பது குல்தீப் போடும் ஸ்டைல். இது கடிகார முள் திசையில் ஸ்விங் ஆகும். பொதுவாக இடது கை ஸ்பின்னர்கள் இப்படிப் போடுவார்கள்.

மாறுகிறார்

மாறுகிறார்

இதுதான் தற்போது இந்திய அணிக்குக் கைகொடுத்து இருக்கிறது. சாஹல் குல்தீப் ஜோடி அதிக விக்கெட் எடுப்பது இப்படித்தான். இதனால் அஸ்வினும் லெக் ஸ்பின் கற்றுக்கொண்டு இருக்கிறார். இந்த ஐபிஎல் போட்டியில் அவர் லெக் ஸ்பின் பவுலிங் போட உள்ளார்.

Story first published: Thursday, February 8, 2018, 14:29 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற