கிரிக்கெட்டுல யாருன்னு காட்டியாச்சு... யுவராஜ் சிங்கின் அடுத்த அவதாரம்

Yuvraj Singh about his retirement life | தன் ஓய்வு காலத்தை பற்றி யுவராஜ் என்ன சொல்கிறார் தெரியுமா?

கவுஹாத்தி : கிரிக்கெட்டின் ஆல்-ரவுண்டராக விளையாடிய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கடந்த ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது அடுத்த திறமையை உலகிற்கு வெளிப்படுத்த தயாராகி வருகிறார்.

தன்னுடைய இளைய சகோதரர் மற்றும் மனைவியுடன் இணைந்து யுவராஜ் சிங் ஒரு வெப் சீரிசில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜின் சகோதரர் சராவர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்த வெப் சீரிசில் யுவராஜின் தாய் சப்னம் சிங்கும் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக தயாரிப்பாளர் நிதா சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு

சர்வதேச போட்டிகளில் ஓய்வு

இந்தியாவின் ஆல்-ரவுண்டராக விளையாடிவந்த யுவராஜ் சிங் சர்வதேச அளவில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். இந்நிலையில் கடந்த ஆண்டில் இவர் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெற்று தற்போது உலக அளவில் நடைபெற்றுவரும் டி20 உள்ளிட்ட தனியார் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

நடிப்பை கையிலெடுத்த யுவராஜ்

நடிப்பை கையிலெடுத்த யுவராஜ்

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அடுத்ததாக நடிப்புத்துறையை தன்னுடைய கையில் எடுத்துள்ளார். அவருடைய இளைய சகோதரர் சராவர் சிங் கதாநாயகனாக நடிக்கும் வெப் சீரிசில் யுவராஜ் சிங்கும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிசில் யுவராஜின் மனைவியும் நடிகையுமான ஹாசல் கீச்சும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அசாமை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம்

அசாமை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம்

அசாமை சேர்ந்த டிரீம் ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த வெப் சீரிசை தயாரிக்க உள்ளது. மேலும் இந்த வெப் சீரிசில் யுவராஜ் சிங்கின் தாய் சப்னம் சிங்கும் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக தயாரிப்பாளர் நிதா சர்மா தெரிவித்துள்ளார். கவுஹாத்தியில் யுவராஜின் தாயுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதில் பாலிவுட்டை சேர்ந்த பல்வேறு நடிகர்கள், நடிகைகள் நடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சப்னம் சிங் மகிழ்ச்சி

சப்னம் சிங் மகிழ்ச்சி

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற யுவராஜின் தாய் சப்னம் சிங், இந்த வெப் சீரிசில் தானும் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய மகன்கள் மற்றும் மருமகள் குறித்து தான் பெருமிதம் மற்றும் மிகுந்த மகிழ்ச்சி கொள்வதாகவும் சப்னம் சிங் தெரிவித்துள்ளார்.

அக்ஷய் குமார் படத்தின் எழுத்தாளர்

அக்ஷய் குமார் படத்தின் எழுத்தாளர்

இந்த வெப் சீரிசில் யுவராஜ் சிங் மட்டுமின்றி கவனத்தை பெற்றுள்ள பாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் விபின் யுனியாலும் இணைந்துள்ளார். பாலிவுட்டில் வெளிவரவுள்ள அக்ஷய் குமாரின் "பச்சன் பாண்டே" படத்திற்கு திரைக்கதை எழுதிவரும் இவர், தற்போது இந்த வெப் சீரிசிற்கு திரைக்கதை எழுதவுள்ளதாகவும் தயாரிப்பாளர் நிதா சர்மா தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Former India cricketer Yuvraj Singh is set to star in a web series
Story first published: Wednesday, February 19, 2020, 11:21 [IST]
Other articles published on Feb 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X