For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங்கிக்கு ராகுல் டிராவிட், பந்துவீச்சுக்கு ஜாகீர் கான்.. பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ !

By Karthikeyan

மும்பை: இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். கேப்டன் கோஹ்லிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கும்ப்ளே பயிற்சியாளர் பணியிலிருந்து விலகினார்.

Zaheer Khan, Rahul Dravid named bowling, batting coaches

இதையடுத்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, வீரேந்திரசேவாக், டாம்மூடி, பில் சிம்மன்ஸ், ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்தனர். இவர்களில் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிசிசிஐயின் பொறுப்பு தலைவர் சிகே கன்னா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு மட்டும் டிராவிட் பேட்டிங் ஆலோசகராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் தற்போது, 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக இருக்கிறார். ஐபிஎல் தொடரின்போது டெல்லி அணி பயிற்சியாளராகவும் உள்ளார். டிராவிட்டின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் சிறந்த வீரர்களாக தங்களை நிரூபித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, July 11, 2017, 23:19 [IST]
Other articles published on Jul 11, 2017
English summary
Former India pacer Zaheer Khan has been appointed as the bowling coach while India A and Under 19 coach Rahul Dravid has been named the batting consultant for overseas tours.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X