
ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்தியா அணியில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். புவனேஸ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் உத்தேச அணியில் உள்ளனர்.

உமேஷ் யாதவ் மற்றும் ஷமிக்கு வாய்ப்பு
இவர்களில் மூன்று பந்துவீச்சாளர்களை கொண்டு இந்தியா களமிறங்கும் என தெரிகிறது. தற்போது உள்ள நிலையில் பும்ரா, புவனேஸ்வர் மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு தான் இடம் கிடைக்கும் என அனைவரின் கணிப்பாக உள்ளது. ஆனால், ஜாகிர் கான் உமேஷ் யாதவ் மற்றும் ஷமிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறுகிறார்.

புவி சரிப்பட்டு வர மாட்டார்
ஜாகிர் கூறுகையில் புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு பேட்டிங் செய்வார் என்பதால் அவரை எடுத்து விடக் கூடாது. அவரது பந்துவீச்சு முறை ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எடுபடாது என கூறினார். புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்த டி20 தொடரில் ரன்களை கட்டுப்படுத்துவதில் சில சமயம் தடுமாறினார்.

இந்த 3 வீரர்கள் ஆடணும்
மேலும், ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகிய மூவரை ஆடவைக்க வேண்டும் என கூறினார். இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அதிக அனுபவமும், முன்பை விட முன்னேற்றமும் கொண்டு இருந்தாலும் இவர்கள் மூவரும் அணியில் இருந்தால் இந்தியாவுக்கு சரியாக இருக்கும் என கருதுவதாக குறிப்பிட்டார் ஜாகிர்.

பேட்டிங்கில் இந்தியா முன்னே
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் பந்துவீச்சு தற்போது சமநிலையில் உள்ளது. ஆனால், பேட்டிங்கில் இந்திய வீரர்கள் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால், இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் என ஜாகிர் தெரிவித்தார்.