For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய ஜிம்பாப்வே சுற்றுப் பயணம்.. டோணி சொல்வதை பாருங்க

By Veera Kumar

ஹராரே: ஜிம்பாப்வே நாடுதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியதாக புகழ்ந்துள்ளார் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி.

தற்போது 3 ஒன்டே மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து ஆடிவருகிறது இந்திய அணி. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அடுத்ததாக டி20 போட்டி நடைபெற உள்ளது. ஹராரே மைதானத்தில் சனிக்கிழமை முதல் டி20 போட்டி நடக்க உள்ளது.

ஸ்பெஷல் நாடு

ஸ்பெஷல் நாடு

இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டுடனான தனது நெருக்கம் குறித்து மனம் திறந்துள்ளார் டோணி. தனக்கு இது ஸ்பெஷல் நாடு என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இதற்கு காரணம் உள்ளது.

இந்திய ஏ அணி

இந்திய ஏ அணி

"இந்திய அணியில் இடம் பிடிக்கும் முன்பு, 2004ல் ஜிம்பாப்வேயில் இந்தி ஏ அணியின் சுற்றுப்பயணத்தில் நானும் இடம்பெற்றிருந்தேன். இங்குதான் நான் பிரபலமாகி இந்திய அணியில் இடம் பிடித்தேன்" என்று டோணி கூறியுள்ளார்.

வாழ்க்கையை மாற்றியதாம்

வாழ்க்கையை மாற்றியதாம்

இந்திய அணியில் இடம் பிடிக்க காரணமாக இருந்ததால் ஜிம்பாப்வே அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்ட இடம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஜிம்பாப்வே வரும்போதெல்லாம் நான் மிகவும் என்ஜாய் செய்கிறேன். இது எனக்கு 3வது டூர் என்றும் டோணி தெரிவித்தார்.

சதங்கள்

சதங்கள்

டோணி, பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியது 2004ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த போட்டியில்தான். இதுதான் இந்திய அணியில் டோணி நுழைய வாயில் கதவை திறந்து விட்டது.

Story first published: Saturday, June 18, 2016, 11:55 [IST]
Other articles published on Jun 18, 2016
English summary
India's limited-overs captain Mahendra Singh Dhoni has said Zimbabwe is a "very special place" for him since it helped him to get into the national team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X