For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அடப்பாவிகளா!! போட்டியை தள்ளிப்போட வீரர் செத்துட்டாருன்னு புரளி கிளப்பிய கால்பந்து அணி!!

சௌத் டுப்ளின் : அயர்லாந்தை சேர்ந்த ஒரு கால்பந்து கிளப், தன் அணியின் வீரர் இறந்துவிட்டார் என புரளி கிளப்பி விட்டு போட்டியை தள்ளிப் போட்டுள்ளது.

அயர்லாந்தை சேர்ந்த பாலிப்ராக் (Ballybrack) என்ற கால்பந்து அணி தன் அணியின் வீரர் பெர்னாண்டோ மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிர் இழந்துவிட்டார் என செய்தியை பரப்பியது.

இந்த செய்தி அயர்லாந்தின் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. ஆனால், தற்போது இது பொய்யான செய்தி என தெரிய வந்துள்ளது.

எங்களால் ஆட முடியாது

எங்களால் ஆட முடியாது

பாலிப்ராக் அணி தங்கள் வீரர் பெர்னாண்டோ இறந்து விட்டதால் தாங்கள் பங்கேற்று இருக்கும் லெயின்ஸ்டர் லீக் என்ற கால்பந்து தொடரின் அடுத்த போட்டியில் ஆட முடியாத நிலைமையில் இருக்கிறோம் என கூறி ஆர்க்லோ அணிக்கு எதிரான போட்டியை தள்ளிப் போட்டது.

மன்னிப்பு கேட்டனர்

மன்னிப்பு கேட்டனர்

எனினும், தற்போது இது பொய் என்ற தகவல் வெளியானதை அடுத்து பாலிப்ராக் அணி தாங்கள் தவறுதலாக ஒரு செய்தியை நம்பி விட்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறி உள்ளது. ஆனால், இந்த கிளப் தெரிந்தே தான் இப்படி செய்தது என கூறுகிறார் லெயின்ஸ்டர் லீக் தொடரின் தலைவர் டேவிட் மோரான்.

அஞ்சலி செலுத்தினர்

அஞ்சலி செலுத்தினர்

பாலிப்ராக் அணி சொன்ன பொய்யை உண்மை என நம்பிய லெயின்ஸ்டர் லீக் அமைப்பு, அந்த வாரம் நடைபெற்ற போட்டிகளுக்கு முன் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தியதோடு, வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.

உண்மை எப்படி வெளியானது?

உண்மை எப்படி வெளியானது?

வியாழக்கிழமை நடந்த விபத்தில் பெர்னாண்டோ உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில், அவர் சனிக்கிழமை தன் நாடான ஸ்பெயினுக்கு கிளம்பிச் சென்றார் என கூறியதை வைத்து தான் உண்மையை கண்டுபிடித்துள்ளனர் லெயின்ஸ்டர் லீக்கின் நிர்வாகிகள்.

அபராதம் கட்டணும்

அபராதம் கட்டணும்

இந்த பொய்யின் நாயகனான பெர்னாண்டோ இது பற்றி முன்பே அறிந்து இருக்காவிட்டாலும், தன்னை வைத்து ஏதோ திட்டம் போடுகிறார்கள் என்பதை மட்டும் அறிந்துள்ளார். இப்போது இவ்வளவு தூரம் இது பிரச்சனையான பின் தன் இறப்பு பற்றி வந்த செய்திகளை கண்டு சிரித்துக் கொண்டுள்ளார். போட்டியை தள்ளிப் போட நாடகம் ஆடிய பாலிப்ராக் அணி அபராதம் செலுத்த வேண்டும் என தெரிகிறது.

Story first published: Thursday, November 29, 2018, 18:50 [IST]
Other articles published on Nov 29, 2018
English summary
In Ireland a football club claimed their player was dead to postpone a match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X