செல்போன் பேசிக் கொண்டே பயணித்த டேவிட் பெக்காம்.. 6 மாதங்கள் கார் ஓட்ட நீதிமன்றம் தடை

லண்டன்:மொபைல் போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதற்காக, இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுக்கு 6 மாதங்கள் வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டு ள்ளது.

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் பெக்காம். அவர் இங்கிலாந்து அணிக்காக மட்டுமல்லாது மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணி கிளப் அணிகளுக்காக விளையாடி பெயர் பெற்றவர். கடந்தாண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி தெற்கு லண்டன் பகுதியில் இருந்து தமது பெண்ட்லே காரில் பெக்காம் அதிவேகமாக சென்றிருக்கிறார்.

அப்போது அவர் மொபைல் போன் பேசிக் கொண்டே காரை இயக்கியதை பார்த்த ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. தெற்கு லண்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

பெக்காம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெரால்டு டைரல், இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதாக அவருக்கு நினைவில்லை. ஆனாலும் இதுபோன்ற தவறுகள் எப்பொழுதுமே நடக்கக்கூடாது என்று வாதிட்டார். அப்போது செல் போன் பேசியபடி பெக்காம் காரில் சென்ற புகைப்படம் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

தல தோனியோட அந்த திறமையெல்லாம் கோலிக்கு வரவே வராது... கழுவி, கழுவி ஊற்றிய பயிற்சியாளர்

இதையடுத்து பெக்காமுக்கு 6 மாதங்கள் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. அதாவது இந்த 6 மாதங்களிலும் கார் மட்டும் அல்ல.. எந்த இரு சக்கர வாகனமும் பெக்காம் ஓட்டக்கூடாது. மேலும் அவருக்கு 750 டாலர் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Former footballer David Beckham has been banned for 6 months for driving.
Story first published: Friday, May 10, 2019, 13:41 [IST]
Other articles published on May 10, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X