For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

நம்புங்க.. இந்திய கால்பந்து அணி.. ஒரு காலத்தில் "சீமராஜா" - தெறித்து ஓடிய உலக அணிகள்

மும்பை: இந்திய கால்பந்து அணி ஒரு காலத்தில் எவ்வளவு வலிமையானதாக இருந்தது தெரியுமா? இப்போதிருக்கும் அணிக்கும், அப்போதிருந்த அணிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

கிரிக்கெட் தான் இந்தியாவின் நம்பர்.1 ஸ்போர்ட் என்பது நேற்று பிறந்த குழந்தைக்கும் தெரியும். ஆனால், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் விளையாட்டு எது என்றால், அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிப்பார்கள்.

ஏனெனில், எதைச் சொல்வது என்று யாருக்கும் தெரியாது. கபடியை சொல்வதா, ஹாக்கியைச் சொல்வதா, பேட்மிண்டனை சொல்வதா, கால்பந்தை சொல்வதா.. எதைச் சொல்வது? ஏனெனில், கிரிக்கெட்டுக்கும் மற்ற விளையாட்டுக்குமான தொலைவு அவ்வளவு தூரம் இங்கு உள்ளது.

74 கோல்

74 கோல்

எனினும், இப்போது தனது சாதனையால் ரசிகர்களை கால்பந்து நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. ஃபிபா உலகக் கோப்பை 2022 மற்றும் 2023 AFC ஆசிய கோப்பை தொடர்களுக்கான தகுதிச் சுற்று போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. இதில், இரண்டு கோல் அடுத்த சுனில் சேத்ரி, 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணி ஃபிபா உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இந்த இரண்டு கோல்களின் மூலம் உலக அளவில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 74 கோல்களுடன் 2ம் இடத்திற்கு சுனில் முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸி அடித்துள்ள மொத்த கோல்கள் 72.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

இந்திய அணியின் நிலைமை இன்று? உலக அளவில் 105வது இடத்தில் உள்ளது. ஆனால், முன்பு எப்படி இருந்தது தெரியுமா? 1951 - 1962 காலக்கட்டம் இந்திய கால்பந்து அணியின் பொற்காலம் எனலாம். இந்திய கால்பந்து ஜாம்பவான் சையது அப்துல் ரஹீமின் தலைமையில் இந்திய அணி, ஆசியாவின் சிறந்த அணியாக விளங்கியது. 1951ல் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடரில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

தெறிக்கவிட்ட இந்திய அணி

தெறிக்கவிட்ட இந்திய அணி

1951ல் இருந்து 1955 வரை நடைபெற்ற Quadrangular தொடரை தொடர்ச்சியாக வென்றது இந்திய கால்பந்து அணி. 1956ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில், கால்பந்து போட்டிகளில் நான்காவது பிடித்தது இந்தியா. உலக அணிகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில், இந்திய கலந்து கொண்டது இது இரண்டாவது முறையாகும். அதுவும் தொடரை நடத்திய ஆஸதிரேலியா அணியை முதல் போட்டியிலேயே 4-2 என்ற கோல் கணக்கில் தெறிக்கவிட்டது இந்திய கால்பந்து அணி.

முதல் ஆசிய அணி

முதல் ஆசிய அணி

அதுமட்டுமின்றி, அப்போட்டியில் நெவில்லே என்ற இந்திய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்து, ஒலிம்பிக்சில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் ஆசிய வீரர் எனும் பெருமையை பெற்றார். அந்த ஒலிம்பிக் தொடரில், அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக்சில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆசிய அணி எனும் பெருமையை பெற்று வரலாற்றை படைத்தது.

அல்லாடுகிறோம்

அல்லாடுகிறோம்

சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 - 7 என்ற கணக்கிலும் இந்திய அணியின் மிரட்டலான வெற்றிகளாகும். 1996ம் ஆண்டு உலகத் தரவரிசையில் 34வது இடத்தை பிடித்ததே, இந்திய அணியின் மாபெரும் சாதனையாகும். இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர்களாகிய நாம் தான் இன்று, ஒலிம்பிக்கில் தகுதிப் பெற கூட அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.

Story first published: Wednesday, June 9, 2021, 19:59 [IST]
Other articles published on Jun 9, 2021
English summary
indian football team earlier records - இந்திய கால்பந்து அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X