6035 கோடி.. மிரள வைத்த லா லிகா.. கண்ணீர் விட்ட குடும்பம்.. பார்சிலோனாவிலேயே இருக்க மெஸ்ஸி முடிவு

பார்சிலோனா : பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து விலகும் முடிவை கைவிட்டார்.

IPL 2020 Schedule-வெளியாவதில் தாமதம் ஏன்? | Oneindia Tamil

இன்னும் ஓராண்டுக்கு அதே அணியில் நீடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இது அவரது ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதே சமயம், அவரை பார்சிலோனா வலுக்கட்டாயமாக அணியில் நீடிக்க வைத்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தன்னை வளர்த்த அணிக்கு எதிராக தான் நீதிமன்றத்துக்கு போக விருப்பமில்லை எனவும் தன் முடிவை மாற்றிக் கொண்டதற்கான காரணத்தை அவர் கூறி உள்ளார். மேலும், தன் குடும்பத்தினரும் தான் விலகுவதை விரும்பவில்லை என அவர் கூறினார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

கடந்த மாத இறுதியில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த முடிவை மெஸ்ஸி ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

17 ஆண்டுகளாக ஆடிய அணி

17 ஆண்டுகளாக ஆடிய அணி

பார்சிலோனா அணியில் மெஸ்ஸி சுமார் 17 ஆண்டுகளாக ஆடி உள்ளார். அந்த அணியில் தான் முழுமையான கால்பந்து வீரராக பயிற்சி பெற்று வளர்ந்தார். அதனால், பார்சிலோனா அணியை விட்டு அவர் பிரிய முடிவு எடுத்த போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

விலகல் முடிவு

விலகல் முடிவு

கடந்த சில மாதங்களாக மெஸ்ஸி பார்சிலோனா நிர்வாகத்தின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து இருந்தார். சமீபத்திய தோல்விகளும் அவரை பாதித்தது. இதை அடுத்து மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு விலகும் முடிவை எடுத்தார்.

6035 கோடி

6035 கோடி

அவரது விலகல் முடிவை தடுக்க பார்சிலோனா காய் நகர்த்தியது. லா லிகா கால்பந்து தொடரின் 2020 சீசன் விரைவில் துவங்க உள்ளது. லா லிகா நிர்வாகம் பார்சிலோனாவுக்கு ஆதரவாக ஒப்பந்தப்படி 6035 கோடி (824 மில்லியன் அமெரிக்கா டாலர்) அளித்தால் மெஸ்ஸி லா லிகா தொடரின் போது பார்சிலோனா அணியை விட்டு விலகலாம் என அறிவித்தது.

நீதிமன்றத்துக்கு செல்ல விரும்பவில்லை

நீதிமன்றத்துக்கு செல்ல விரும்பவில்லை

அதை வைத்தே பார்சிலோனா அணி மெஸ்ஸியை அனுப்ப மறுத்தது. மெஸ்ஸி இதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லலாம். ஆனால், தன்னை வளர்த்த அணிக்கு எதிராக தான் நீதிமன்றத்துக்கு செல்ல விரும்பவில்லை. அதனால் மேலும் ஓராண்டு பார்சிலோனா அணியில் நீடிக்க விரும்புவதாக கூறி உள்ளார்.

கண்ணீர் விட்ட குடும்பம்

கண்ணீர் விட்ட குடும்பம்

மேலும், தான் பார்சிலோனா அணியை விட்டு விலகும் முடிவை குடும்பத்தினரிடம் அறிவித்த போது அது பெரிய நாடகமாக இருந்தது. மொத்த குடும்பமும் கண்ணீர் விட்டு அழுதது. என் குழந்தைகள் பார்சிலோனாவை விட்டு விலகுவதை விரும்பவில்லை. அவர்கள் தங்கள் பள்ளிக் கூடத்தை மாற்றுவதையும் விரும்பவில்லை எனக் கூறினார் மெஸ்ஸி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Lionel Messi decided to stay in Barcelona for one more year after La Liga asked for 700 million euors as release clause. Messi didn’t wanted to move to court against Barcelona, the club of his life.
Story first published: Saturday, September 5, 2020, 11:40 [IST]
Other articles published on Sep 5, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X