For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

திரைப்படத்தை மிஞ்சும் கடைசி கட்ட திருப்பங்களால், ஆட்டத்தின் போக்கை மாற்றிய நெதர்லாந்து

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: பரபரப்பாக நடைபெற்ற நெதர்லாந்து மற்றும் மெக்சிகோ இடையேயான ஆட்டத்தில் திரைப்படத்தில் வரும் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் நடந்து காலிறுதிக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து. கடந்த உலக கோப்பை போட்டியின் ரன்னர்-அப் அணியான நெதர்லாந்தும், வட அமெரிக்க நாடான மெக்சிகோவும் நேற்று இரவு நடைபெற்ற நாக்-அவுட் சுற்று போட்டியில் சந்தித்தன. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல்போடாமல் கடுமையாக போராடின.

மெக்சிகோ முதல் போணி

மெக்சிகோ முதல் போணி

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும், மெக்சிகோவின் ஜியோவனி டாஸ் சான்டோஸ் 48வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்தார்.

கடைசி கட்டம்வரை முடியலை..

கடைசி கட்டம்வரை முடியலை..

இதன்பிறகும் நெதர்லாந்தால் உடனடியாக பதில் கோல் போடமுடியவில்லை. ஆட்டம் முடிய இரு நிமிடங்கள் மட்டுமே பாக்கியிருந்த நிலையிலும் நெதர்லாந்தால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் அதன் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வைந்துவிட்டனர்.

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்!

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்!

அப்போதுதான் அந்த அந்த திருப்பம் நிகழ்ந்தது. 88வது நிமிடத்தில், அதாவது கடைசி கட்டத்தில், நெதர்லாந்தின் வெஸ்லி ஸ்னெஜ்டர் கோல் போட்டு அசத்தினார். திரைப்படத்தின் முக்கிய தருணத்தில் ஹீரோ காப்பாற்றுவாரே அதுபோல. இந்த கோலுக்கு பிறகுதான், நெதர்லாந்து ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.

பெனால்டியால் வெற்றி

பெனால்டியால் வெற்றி

ஆட்டம் சமன் அடைந்ததால், கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அப்போது பெனால்டி வாய்ப்பு நெதர்லாந்துக்கு அதிருஷ்டவசமாக கிடைத்தது. இதை லாவகமாக பயன்படுத்தி, கோல் கீப்பரை ஏமாற்றி கம்பத்துக்குள் சரியாக தட்டிவிட்டார் க்ளாஸ் ஜான் ஹண்டலார்.

கடைசி நேர தடுமாற்றம்

கடைசி நேர தடுமாற்றம்

இதையடுத்து நெதர்லாந்து 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. கடுமையாக போராடிய மெக்சிகோ கடைசி நேரத்தில் கோட்டைவிட்டதன் விளைவாக, போட்டித்தொடரை விட்டே வெளியே போய்விட்டது.

சர்ச்சை

சர்ச்சை

நெதர்லாந்து வெற்றிக்கு காரணம், 90+4வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கிக்'தான். மெக்சிகோவின் ரஃபா மார்குவஸ் பந்தை கடத்த முற்பட்டபோது, நெதர்லாந்தின் அர்ஜென் ரொப்பனின் காலை இடறிவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இதற்காகவே பெனால்டி வழங்கினார் போர்ச்சுக்கலை சேர்ந்த நடுவர் பெட்ரோ புரோயன்சா.

பட்டும் படாமல்..

பட்டும் படாமல்..

டிவி ரிப்ளேக்களில் நெதர்லாந்து வீரரின் கால்களில், மெக்சிகோ வீரர் கால்கள் படாததுபோல தெரிந்தது. இருப்பினும் நெதர்லாந்து வீரர் ஓவர் ஆக்டிங் செய்து பெனால்டி பரிசை பெற்றுள்ளார். இதனால் நடுவர் குறித்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளது.

Story first published: Monday, June 30, 2014, 13:04 [IST]
Other articles published on Jun 30, 2014
English summary
Klaas-Jan Huntelaar struck a stoppage-time penalty as the Netherlands staged an incredible late fightback to beat Mexico 2-1 and reach the World Cup quarterfinals on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X