For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஹாக்கி, டென்னிஸ்.. ஒலிம்பிக்கில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மிஸ் பண்ணிறாதீங்க!

By Veera Kumar

ரியோ டி ஜெனிரோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியாச்சு.

நம்மூர் ரசிகர்களுக்கு நம்ம வீரர்கள் எப்போது, எந்தெந்த போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பதுதானே பெரும் எதிர்பார்ப்பு.

அதை நீங்கள் அறிந்து கொள்ளவே இந்த தகவல். ஒலிம்பிக்கை நேரடியாக ஒளிபரப்பு செய்யும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நம்ம நாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நீங்கள் பார்க்க டைம் ஒதுக்கி கொள்ளுங்கள்

மாலையில் அதகளம் ஆரம்பம்

மாலையில் அதகளம் ஆரம்பம்

இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டியொன்று தொடங்குவது நமது நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்குதான். ஆடவர்க்கான ஒற்றையர் கை துடுப்பு படகு பந்தையம் அப்போது நடக்கிறது. தத்து போகனால் பங்கேற்கிறார்.

டமால், டுமீல்

டமால், டுமீல்

10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி, 10 மீட்டர் ஏர் ரைஃபல் துப்பாக்கி சுடும் போட்டிகளும் 5 மணிக்கு நடைபெறுகிறது. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் ஜிது ராய், குருப்ரீத் சிங் பங்கேற்கிறார்கள். ஏர் ரைஃபல் பிரிவில் அபுர்வி சந்தேலா, அயோனிகா பவுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ்

மாலை 5.30 மணிக்கு ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அசந்தா ஷரத் கமல், சவுமியாஜித் கோஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் மனிகா பத்ரா மற்றும் மவுமா தாஸும் பங்கேற்கிறார்கள்.

ஹாக்கி

ஹாக்கி

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஹாக்கி போட்டியில், அயர்லாந்தை, இந்திய ஹாக்கி அணி எதிர்கொள்கிறது. இழந்த பெருமையை மீட்க இந்திய ஹாக்கி அணி இந்த ஒலிம்பிக் தொடரை பயன்படுத்திக்கொள்ளுமா என்பது அந்த போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.

சண்ட போடாம ஆடுங்கப்பு

சண்ட போடாம ஆடுங்கப்பு

இரவு 11 மணிக்கு ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ரோஹன் போபன்னா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மகளிர் திலகம்

மகளிர் திலகம்

மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் பிராதனா தொம்பரேவும் பங்கேற்கிறார்கள். ஆடவரை பார்க்கவா, மகளிர் டென்னிசை பார்க்கவா என்ற டெலிகேட் பொஷிஷனில் இருக்கும் இந்திய ரசிகர்களே ரெண்டு சேனலையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ளுங்கள்.

வெயிட்டான ஆளுங்கப்பு

வெயிட்டான ஆளுங்கப்பு

ஆகஸ்ட் 7ம் தேதி, நாளை அதிகாலை, 3.30 மணிக்கு நடைபெறும், 48 கிலோ பிரிவு, பளு தூக்குதல் போட்டியில் சாய்கோம் மிராபி சானு பங்கேற்கிறார். வெற்றியோ, தோல்வியோ, அது இரண்டாவது பட்சம். இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அத்தனை நிகழ்வுகளையும் காணத்தவறாதீர்கள்.

.
Story first published: Saturday, August 6, 2016, 11:48 [IST]
Other articles published on Aug 6, 2016
English summary
All eyes will be on Indian shooters as they will be in action at Rio Olympics 2016 today (August 6).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X