For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐரோப்பிய கால்பந்து தொடர்- பீலேவின் கோல் சாதனையை முறியடித்த மெஸ்ஸி

By Mathi
Lionel Messi and Pele
மாட்ரிட்: ஐரோப்பிய உள்ளூர் போட்டியான லா லிகா கால்பந்து லீக் தொடரில் மல்லோர்காவை 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பீலேவின் கோல் சாதனையை பார்சிலோனாவின் மெஸ்ஸி முறியடித்திருக்கிறார்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் லா லிகா கால்பந்து லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆட்டத்தின் முதல் பாதியில் மெஸ்ஸி உட்பட பார்சிலோனா அணியினர் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 2-வது பாதியில் மல்லோர்கா 2 கோல்களை மட்டுமே போட முடிந்தது. மெஸ்ஸி இப்போட்டியில் 2கோல்களை அடித்ததுடன் முன்னணி வீரரான பீலேயின் கோல் சாதனையை முறியடித்திருக்கிறார்.

நடப்பு ஆண்டில் மெஸ்ஸி மொத்தம் 76 கோல்களை அடித்திருக்கிறார். 1972ஆம் ஆண்டு முல்லெர் அடித்த 85 கோல்களே சாதனையாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்து பீலேதான் ஒரு ஆண்டில் 75 கோல்களை அடித்த சாதனையாக இருந்தது. தற்போது இதனை மெஸ்ஸி முறியடித்திருக்கிறார். 2011-12ஆம் ஆண்டில் மெஸ்ஸி 73 கோல்களை அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய லி லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவுக்கு இது 10- வது வெற்றியாகும். இதற்கு முன்பு 1997-98-ம் ஆண்டு லூயிஸ் வான் கால் தலைமையில் லி லிகா தொடரில் 8 வெற்றிகள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பாவின் உள்ளூர் கால்பந்து தொடர்களில் அதிக கோல்கள் அடித்ததற்கா மெஸ்ஸிக்கு தங்க காலணிகள் வழங்கப்பட்டிருந்தது..

Story first published: Monday, November 12, 2012, 17:36 [IST]
Other articles published on Nov 12, 2012
English summary
Lionel Messi surpassed Pele's milestone of goals in a calendar year by scoring for the 75th and 76th time in 2012 to move within nine of Gerd Mueller's all-time record as Barcelona won 4-2 at Mallorca in the Spanish league.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X